Close
அக்டோபர் 5, 2024 7:11 மணி

புதுக்கோட்டை சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில் சூரசம்ஹாரம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி

புதுக்கோட்டை  அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில்   கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை  கோலாகலமாக நடைபெற்றது . இதில் நூற்றுக்கணக்கான  பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை
சாந்தநாதசுவாமி

முன்னதாக, முருகப்பெருமான் தாயாரிடம் பெற்ற சக்திவேலுடன் தங்கமயில் வாகனத்திலும் , போர்ப்படை தளபதியான வீரபாகுத்தேவர் வெள்ளைக்குதிரை வாகனத்திலும் கோயில் சந்நிதி முன்பு எழுந்தருளியதை தொடர்ந்து அங்கு சூரசம்ஹார லீலை சிறப்பாக நடைபெற்றது

நிகழ்வில், அசுரனான பத்மாசூரன் சிங்கமுகமாகவும் , ஆட்டுத் தலையாகவும், மனிதத் தலையாகவும் மாறி மாறி உருவெடுத்து வர பத்மாசூரனை சக்திவேல் கொண்டு முருகப்பெருமான சம்ஹாரம் செய்த நிகழ்வை அங்கு கூடியிருந்த  பக்தர்கள்  அரோகரா கோஷம் முழங்கிட தரிசனம் செய்தனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top