Close
ஏப்ரல் 4, 2025 11:55 காலை

கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரின் வெள்ளிக்கவசம் திறப்பு

சென்னை

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதிபுரீஸ்வரர் கார்த்திகை தீப கவசம் திறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு சிறப்பு அபிஷேக புணுகு சாம்பிராணி தைலத்தை பக்தர்களுக்கு திலகமிட்ட அர்ச்சகர்.

சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரர் மீது மூடி வைக்கப்பட்டிருக்கும்  வெள்ளிக்கவசம் ஞாயிற்றுக் கிழமை  திறந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள 32 சிவ திருத்தலங் களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் படம்பக்கநாதர் ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார்.  சுயம்புவாக உருவானதாகக் கருதப்படும் ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுவ தும் வெள்ளிக்கவசத்தால் மூடப்பட்ட நிலையில்தான் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமியை ஒட்டி மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கவசம் மூன்று நாள்களுக்கு மட்டும் திறந்து வைக்கப்படும்.  இந்த ஆண்டும் கார்த்திகை பவுர்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கவசம் திறக்கப்பட்டு புணுகு சாம்பிராணி தைலம் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.  இரவு ஸ்ரீ தியாகராஜ சுவாமி நான்கு மாடவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் திருவொற்றியூர் தேரடி பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாள்களும் பொதுமக்களின் தரிசனத்திற்கு திறந்து வைக்கப்பட்டு  செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு வெள்ளிக் கவசம் ஆதிபுரீஸ்வரர் மீது மீண்டும் மூடப்படும்.

சென்னை
நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழா நிகழ்ச்சிகளில் கவசம் திறப்பு நிகழ்ச்சியும் ஒன்று என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற் காக வருவாருவார்கள் என்பதால் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோயில் உதவி ஆணையர் எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கவசம் திறப்பு நிகழ்ச்சியில் கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதிபுரீஸ்வரரைத் தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top