திருவொற்றியூரில் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 17 ஆண்டு களுக்குப் பிறகு பரம பதவாசல் திறக்கப்பட்டது.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ராஜகோபும் அமைக்கும் பணிகள் நடைபெற்றதையடுத்து சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். மிகவும் பழைமையான கோயில் என்பதால் பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம்தான் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியையொட்டி காவல் உதவி ஆணையர் சிதம்பர முருகேசன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.