Close
ஜூலை 7, 2024 8:45 காலை

புதுகை சாந்தநாதர் ஆலயத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா..

புதுக்கோட்டை

புதுகை சாந்தநாதர் கோயிலில் நடைபெற்ற பஞ்சமூர்த்தி வீதியுலா

புதுக்கோட்டை திருக்கோயில்களை சேர்ந்த வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத அஷ்டமியை முன்னிட்டு பஞ்சமூர்த்தி வீதியுலா வியாழக்கிழமை நடந்தது.

மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று சகல ஜீவராசி களுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய நாளில் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். வளர்ச்சியும் கூடும்.

சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் இனிய திருநாள்,  மார்கழி அஷ்டமி தினத்தில் பல்வேறு கோயில்களில் சப்பரத்தேரில்  சுவாமி அம்பாள் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவது   சிறப்பம்சமாகும்.

தேய்பிறை அஷ்டமி திதியன்று சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளப்பதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். இன்றைய நாளில் அன்னதானம் செய்தால் புண்ணியம் பெருகும். பொருளாதார நிலையும் உயரும். மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் உயர்வாக கூறிய மார்கழி மாதத்தில் வரும் இந்த மகத்தான நாளில்  முறையாக ஈசனை வழிபட வேண்டும்.

கைப்பிடி அரிசியேனும் யாருக்காவது தானமாகக் கொடுக்க வேண்டும். படியளக்கும் திருநாள் வழிபாட்டையும் செய்து வந்தால் முன்னேற்றம் பன்மடங்காகும். அன்று ஈசனின் சன்னிதியில் சிறிதளவு அரிசியை வைத்து வழிபட்டு அதைக் கொண்டு வந்து உணவில் சேர்த்தால், உணவு பஞ்சம் இன்றி வாழலாம் என்பது ஐதீகம்.

இந்த நாளில் புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலில் சுவாமி- அம்பாள், முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர்,  தனி அம்மன் ஆகிய சுவாமிகள் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா வந்தன.

விழாவினை முன்னிடடு சிறப்பு ஆராதனைகள் அதிகாலை நடந்தன, பஞ்சமூர்த்தி விழாவில் உபயதாரர்களான புதுக்கோட்டை நகரத்தார் சங்கத்தினர், திரளான மகளிர் கலந்து  கொண்டனர்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top