Close
நவம்பர் 22, 2024 4:55 காலை

திருமயம் அருகே புனித உபகார மாதா ஆலயத்தில் பொங்கல் விழா

திருமயம்

திருமயம் அருகே உள்ள எளனாப்பட்டி கிராமத்தில் உள்ள புனித உபகார மாதா ஆலயத்தில் நடந்த பொங்கல் விழா

திருமயம் அருகே புனித உபகார மாதா ஆலயத்தில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள எளனாப்பட்டி கிராமத்தில் உள்ள புனித உபகார மாதா ஆலயத்தில் மூன்று ராஜாக்கள் பொங்கல் விழா சனிக்கிழமை மாலை விமரிசையாக நடைபெற்றது.

வீரமாமுனிவரால் நிறுவப்பட்ட சுமார் 400 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் பொங்கல் திருவிழா நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் நடப்பு ஆண்டு உபகார மாதா ஆலய பொங்கல் விழா காலை 7 மணிக்கு முதல்பாடல் திருப்பலியுடன் தொங்கியது.  இதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் மூன்று ராஜாக்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமயம்
புனித உபகாரமாதா ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா

இதையடுத்து புனித உபகார மாதா அரங்கில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து புனித அருளானந்தர் நாடகம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நிறைவுப்பாடல் திருப்பலியுடன் பொங்கல் விழா நிறைவடை கிறது.

புனித உபகார மாதா ஆலய திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த திரளானோர் திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஞானத்துரை, காரியஸ்தர் சந்தனராசு, கணக்குப்பிள்ளை ராஜேந்திரன் மற்றும் எளனாப்பட்டி, தாளப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top