Close
செப்டம்பர் 19, 2024 10:58 மணி

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் சிறுவர் சிறுமியர் வீதிதோறும் மார்கழி பஜனை

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடிச்செல்லும் சிறுமிகள்

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் சிறுவர் சிறுமியர் வீதிதோறும் மார்கழி  திருப்பாவை திருவெம்பாவை பாடல் பாடி கோயிலுக்குசசென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் மாதங்களில் அதிகாலையில் இறைவனை வணங்குவதற்கான சிறந்த மாதமாக மார்கழி உள்ளது. இந்த மாதத்தில் அதிகாலையில் தெருக்கள்தோறும் சிறுவர் சிறுமியர் திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடி செல்வது வழக்கமாகும்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் பழமையான அருள்மிகு அனாதிருத்ரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இது காஞ்சிப்புராணத்தில் பாடப்பெற்ற திருக்கோயிலாகும். புராண காலத்தில் சிவபெருமானின் அம்சமாகிய அனாதிருத்ரர் வந்து வணங்கியதால் அனாதிருத்ரேஸ்வரர் என்று இங்குள்ள பெருமான் திருப்பெயர் பெற்றார். சிறப்பு பொருந்திய இத்தலத்திலிருந்து ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் தெருக்கள்தோறும் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பண்ணுடன் பாடி செல்வர்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் 100 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் மார்கழி மாதம் அதிகாலையில் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடி செல்கின்றனர். தெருக்கள்தோறும் பாடி சென்று மீண்டும் திருக்கோயிலை அடைந்தவுடன் சிவபெருமானுக்கு பூஜைகள் முடித்து அனைவருக்கும் நாள்தோறும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் திருப்பள்ளிஎழுச்சி பாடல் பாடிச்செல்லும் சிறுமிகள்

நாள்தோறும் ஒவ்வொரு நன்கொடையாளர் மூலம் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. புதன்கிழமையன்று நடைபெற்ற பூஜை யில் வல்லக்கோட்டை முருகன் கோயில் நிர்வாக அதிகாரி சோ. செந்தில்குமார் கலந்துகொண்டு அனைத்து சிறுவர் களுக்கும் இனிப்பும் எழுதுபொருட்களும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை இப்பகுதியைச் சேர்ந்த நாகராஜன், நமச்சிவாயம் ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top