Close
ஜூலை 7, 2024 10:58 காலை

தமிழகத்திலும் விரைவில் இராமர் கோயில்…!

தமிழ்நாடு

தமிழகத்திலும் ராமர் கோயில்

அயோத்தியில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும் இந்தியாவில் தமிழகம் உட்பட இன்னும் இரண்டு இடங்களில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டப்பட உள்ளது.

இது குறித்து பாஜக நிர்வாகிகள் கூறியதாவது: அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22 -ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதால் பிரதமர் மோடி 11 நாள் விரதம் இருந்து வருகிறார்.

இந்தியா முழுவதும் கோயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் பா.ஜ.,வினர் இறங்கி உள்ளனர். கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் இந்தியர்களின் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்துமாறு பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து  நாங்கள் மக்களை நேரில் சந்தித்து பேசி வருகிறோம்.

ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக நாங்கள் மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் போதும், விளக்கேற்ற சொல்லும் போதும், எங்களது கோரிக்கையினை மிகுந்த மனமகிழ்ச்சி மற்றும் மனப்பூரிப்புடன் கேட்டுக் கொள்கின் றனர்.

இந்த கும்பாபிஷேகம் முடிந்ததும் இந்தியாவில் இரண்டு இடங்களில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டப்பட உள்ளது. தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் கோயில் கட்ட ஏற்பாடுகள் நடக்கிறது.  இந்த கட்டுமான பணிகளை வரும் 2026 -ஆம் ஆண்டுக்குள் முடித்து வழிபாட்டுக்குள் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம்.

தவிர தமிழகத்தின் பல முக்கிய இடங்களில் ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய அளவில் சிலைகள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு எந்த வசதிகளையும் செய்யாமல், கேரள அரசு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

அதுவும் இந்த ஆண்டு பல லட்சம் தமிழ்பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை சென்றும் அங்குள்ள பல சிக்கல்கள், போலீசாரின் ஒத்துழைப்பு இன்மை, கேரள அரசின் மெத்தனப்போக்கு காரணமாக வழிபாடு நடத்தாமலேயே திரும்பி விட்டனர்.

இப்படி திரும்பிய பலரும், மிகுந்த சிரமத்திற்கு இடையே வழிபட்ட பலரும், இனியும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க கேரளாவை நம்பியிருக்க  வேண்டுமா? தமிழகத்தில் அதற்கு இணையாக ஒரு ஐயப்பன் கோயில் கட்ட முடியுமா? என எங்களை பார்த்து கேட்கின்றனர்.

இதனால் இந்து அமைப்புகளிடம் பேசி, ஐயப்பனுக்கும் கோயில் கட்டுங்கள் என பக்தர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளோம். விரைவில் சபரிமலை ஐயப்பன் தமிழகத்தில் தரிசனம் தரவும் வாய்ப்புகள் உள்ளது என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top