Close
நவம்பர் 21, 2024 5:28 மணி

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

ஈரோடு

கோபியிலுள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயிலின் குண்டம் விழா கடந்த டிசம்பர் 28 -ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது, கடந்த 5 -ஆம் தேதி தேர்நிலை பெயர்தல் நடந்தது. அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மாவிளக்கு பூஜையும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் பூதவாக னத்தில் எழுந்தருளி அம்மன் அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஜனவரி 11 -ஆம் தேதி குண்டம் விழா காலை 7 மணி அளவில் தொடங் கியது. விழாவை தலைமை பூசாரி பி. எஸ். ராமானந்தம் தொடக்கி வைத்தார்.

ஈரோடு
கோபி பாரியூர் கோயிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாலில் பங்கேற்ற பக்தர்

பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட கீயூவரிசையில் நின்று தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.  கல்யாண விநாயகர் கோவில் வழியாக அமரபணீஸ்வரர்கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், தடப்பள்ளி வாய்க்கால் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து குண்டம் இறங்கினர். எஸ்.பி., ஜவகர் தலைமை யில் 500 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாளை மாலை 4 மணி அளவில் தேரோட்டம் நடக்கிறது. 13 -ஆம்  தேதி மாலை 4 மணிக்கு தேர் நிலையை வந்து அடைகிறது. இதனை தொடர்ந்து இரவு மலர் பல்லாக்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் ,14 -ஆம்  தேதி கோபியில் தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

15 -ஆம்  தேதி மற்றும் 16 -ஆம்  தேதி கோபியில் மஞ்சள் நீர் உற்சவமும்,17 -ஆம்  தேதி 18 -ஆம்  தேதி புதுப்பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவமும், 19 -ஆம்  தேதி 20 -ஆம்  தேதி நஞ்ச கவுண்டம்பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவமும், நடக்கிறது 20.1.2023 -ஆம்  தேதி மறுபூஜை திருவிழாவுடன் விழா நிறைவடைகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top