திருமயம் நகரில் ஊத்துக்கேணி வீதியில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ஊத்துக்கேணித் தெருவில் அமைந்து அருள்பாலித்து வரும் வரசித்திவிநாயக ருக்கு தை மாதம் 5-ஆம் தேதி (19-01-2024) வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்குமேல் 10.15 மணிக்குள் மஹா கும்பாபி ஷேகத்தை நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.
அதன்படி, கோயில் முன் அமைக்கப்பட்ட யாகாசாலையில் வியாழக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை. புன்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கரணம் அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், கும்பஅலங்காரம் முதல் கால யாக பூஜையில் இரவு 8 மணிக்கு வேதபாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை கோ பூஜை, நாடி சந்தானம், பிம்பசுத்தி இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்திராதானம் ஆகிய பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர்..
இதைத்தொடர்ந்து 9.30 மணிக்கு மூலஸ்தான விமானத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து காலை 11 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக் கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்வில், விழாக்குழுவினர் மீனா மெஸ்ராஜேந்திரன், திருமயம் வர்த்தகர் சங்கத்தலைவர் க. கருப்பையா, திருமயம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தலைவர் எம்.பி. சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் சரண்யா சரவணன் மற்றும் திருமயம் சுற்று வட்டார பகுதியைச் சார்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.