புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் அதிரடியாக மீட்டனர்.
தஞ்சாவூர் இணை ஆணையர் (மண்டலம்) உத்தரவுப்படி பட்டியலைச் சாராத திருக்கோயிலின் நிலம் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், பழைய கந்தர்வகோட்டை, அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.50 கோடி மதிப்பிலான 38.37 ஏக்கர் சென்ட் நிலங்கள் மீட்டக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் தி. அனிதா தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட வட்டாட்சியர்( ஆலய நிலங்கள்) வனிதா, இத்திருக்கோயில் செயல் அலுவலர் சந்திரசேகரன், திருக்கோயில் பணியாளர்கள் ராம்கி, பாக்கியராஜ் , பழனிவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.