Close
ஜூலை 7, 2024 8:28 காலை

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…..பெருமைகளைப் படிங்க…பக்தர்களே…..

தமிழகத்தினைப் பொறுத்தவரை எந்தவொரு சுப விசேஷம் என்றால் முதலில் வணங்குவது பிள்ளையாரைத்தான். கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் மஞ்சளிலே பிள்ளையார் செய்து வழிபடுவார். முதற்கடவுள் விநாயகரை வணங்காமல் எந்த செயலையும்துவங்க மாட்டார்கள். இது தான் தமிழக பாரம்பரியம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மலர் அல்லது இலையால் வழிபடுவது மிகவும் விசேஷமாகும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் விநாயகருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது அருகம்புல். வில்வம் மற்றும் வன்னி மரத்து இலைகள் ஆகும். மலர்களில் தும்பைமலர், ஜாதி மலர் (பிச்சிப்பூ) மற்றும் எருக்க மலர்கள் விசேஷமானவை.

அருகம்புல்லை அர்ச்சனைக்குப் பயன்படுத்தினாலும், மாலையாக அணிவித்தாலும் விநாயகர் பெரிதும் மகிழ்வார். அருகிட்டு வழிபடும் பக்தர்களுக்கு அளவில்லாத செல்வத்தைக் கொடுப்பார்.விநாயகர் அனலாசுரன் என்ற அசுரனை விழுங்கி அழித்தார். அவன் வடவைத்தீ (யுக முடிவில் வெளிப்படும் நெருப்பு)யைக்காட்டிலும் வெப்பம் மிகுந்தவன். தேவர்கள் சந்தனம் முதலியவற்றை பூசி விநாயகரைக் குளிர்விக்க முயன்றனர். முடியவில்லை. அந்த நிலையில் அவரைக்குளிர்விக்க பயன்படுத்தப்பட்டது அருகம்புல். அருகம்புல்லால் தினமும் அர்ச்சிக்க அர்ச்சிக்க விநாயகர் மனம் குளிர்வார்.தினமும் 21 நாமாக்களைக் கூறி, அருகம்புல்லால் ஆனைமுகனை அர்ச்சிப்பது உத்தமம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவ, பித்ரு,மானிட கடன்கள் உண்டு. தேவ கடனை வழிபாடு,யாகம் மூலமும், பித்ரு கடனை திதி, தர்ப்பணம், மூலமும் தீர்க்கலாம்.மனிதனுக்கு ஏற்படும் கடனை கணபதி வழிபாட்டின் மூலம் தீர்க்கலாம். சென்னை குன்றத்துார் காத்யாயினி கோயிலில் உள்ள தோரணகணபதியை வழிபடுங்க.

கடன் தொல்லையிலிருந்து முழுவதும் விடுபட இந்த கணபதியை வணங்கிடுங்க என்கிறார் அவ்வையார். அம்மன் கோயில்களில் தோரணவாயில் அருகே அருள் பாலிப்பவர் தோரணகணபதி. இவரது தலையில்ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும் மேல் இருகைகளில் அங்குசமும் பாசமும், கீழ் இரு கைகளில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு காட்சி தருகிறார். தேய்பிறை,வளர்பிறை சதுர்த்தி, செவ்வாய், ஞாயிறு அன்று தீபமேற்ற தன் கையில் உள்ள தந்தத்தைக்கொண்டு அவர்களது கடன்தீர ஆசி வழங்குவார். தோப்புக்கரணம் இடுவது அவசியமானது. இவருக்கு பிடித்த பிரசாதங்கள் படைத்து வழிபடலாம். அருகம்புல் மாலை, சாற்றுவது உத்தமம். ஆறுவாரங்கள் தொடர்ந்து இவ்வழிபாட்டினை கடைப்பிடிக்க கடன் தீரும். காரிய சித்தி மாலை படிக்கும் பக்தர்களின் வாழ்வில் வெற்றி உண்டாகும். தமிழகத்தில் மயிலாடுதுறை, வாரணாசி, சிருங்கேரி, சாரதாம்பாள் கோயில்களில் தோரண கணபதிக்கு சன்னதி உள்ளது.

சதுர்த்தி நாட்களிலாவது அருகம்புல்லார் அர்ச்சிப்பது விசேஷம். இரண்டாவதாக , வன்னி மர இலை, இது விநாயகருக்கும் சனீஸ்வரனுக்கும் உகந்த இலை. மலர்களில் மணம் உள்ள மலரால் விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். குறிப்பாக பிச்சிப்பூவால் அர்ச்சித்தால் அளவில்லாத ஞானம் கிடைக்கும். வெண்தும்பை மலர்களினால் அர்ச்சித்தால் கேட்டது கிடைக்கும்.தும்பை பூக்களுக்கு மாற்றாக காசித்தும்பை பூக்களைப் பயன்படுத்தலாம். எருக்கம் மலர்மாலையை சாற்றலாம். விநாயகருக்கு பிரியமான மோதகம், அப்பம் முதலானவற்றை சக்திக்கு ஏற்ப செய்து படைப்பது நல்லது. பால், தேன், பாகு, பருப்பு, முதலியவற்ளை தந்தால்அவர் அளவில்லாத தமிழ்ப்புலமை அளிப்பார் என்று அவ்வையார் சொல்லியிருக்கிறார். எளிமையாக கிடைக்கும் அருகம்புல் அல்லது மலிவாக கிடைக்கும் பொரியைப் படைத்தாலே போதும்.அளவில்லாத செல்வம் அளிப்பார் ஆனைமுகன்.

முழுமுதற் கடவுள் கணபதியை தமக்கு விரும்பிய தோற்றங்களில் உருவாக்கி பக்தர்கள் வழிபடுவார்கள்.அந்த அளவிற்கு கணபதி மீது பக்தர்கள் பாசத்தால் கட்டுண்டு கிடப்பார்கள். இங்கே 16 வகை கணபதிகளின் அவதார அழகு விளக்கப்பட்டு இருக்கிறது.

1.பாலகணபதி :

பரமசிவனின் மடியில் இருப்பவர் பாலவிநாயகர் என்கிறது ஒரு தியான சுலோகம். நான்கு கைகளில் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், கரும்பு ஆகியவற்றை ஏந்தி இருப்பார். தும்பிக்கையில் மோதகம் இருக்கும். இவரது நிறம்- சூரிய ஒளி

 

2. தருண கணபதி

யானை முகம் கொண்டவர் . 8 கைகளில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், யானைத்தந்தம், நெற்கதிர், கரும்புத்துண்டு, இருக்கும். இளமைத் தோற்றம் கொண்டவர் கரங்களில் நெற்கதிர், மாம்பழம், எள்ளுருண்டை, புல்லாங்குழல், ஆகியன இருக்கும். சிவந்த நிறமுடையவர்.

3.பக்தி கணபதி

பக்தி கணபதி என்றும் சொல்வர். நான்கு கைகளில் தேங்காய் மாம்பழம், வாழைப்பழம், வெல்லப்பாயாசம் நிறைந்த பாத்திரம் ஆகியன ஏந்தியிருப்பார். வெண்ணிறம் கொண்டவர்.

4.வீரகணபதி

சிவந்த திருமேனி, கோபம் காரணமாக முகத்திலே கூடச் சிறிது சிவப்பு இருக்கும். பதினாறு கைகள் கொண்ட திருக்கோலம், வேதாளம் (பூதம்), சக்தி(வேல்), பாணம் (அம்பு),வில், சக்கரம், கத்தி, கட்வாங்கம், சமட்டி, கதை, அங்குசம், நாகம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவை ஏந்தியிருப்பார்.

 

 

5.சக்தி கணபதி

செம்பருத்தி பூப்போல நிறம் கொண்டவர். நான்கு கைகள்.மேல் இரண்டு கைகளில் பாசமும், துறட்டியும் இருக்கும். வலது கைகளில் கீழ்ப்புறம் உள்ள கையில் ஒற்றைக் கொம்பு இருக்கும். தும்பிக்கையில் மோதகம் அல்லது அமிர்த கலசம் இருக்கும். மடியில் அம்பிகை அமர்ந்திருப்பார்.

6.துவஜ கணபதி

நான்கு யானை முகங்கள் உடையவர். கைகளில் மின்னல் கொடி போன்ற ஒளிவீசக்கூடிய வளையல்கள் அணிந்திருப்பார். சந்திரன் போன்ற நிறமுடைய மேனியை உடையவர். புத்தகம், ஜபமாலை, தண்டலம், கமண்டலம் ஏந்தியிருப்பார்.

7.சித்தி கணபதி

இவரைப் பிங்கள கணபதி என்றும் சொல்வர். இவரின் 2 பக்கங்களில் 2 தேவியர் இருப்பர். ஒருவர் ஸ்ரீ என்னும் சக்தி (ஸ்ரீதேவி), இன்னொருவர் ருத்தி என்னும் சக்தி (ஸம்ருத்தி தேவி)4 கைகள் உடையவர். இவரின் நிறம் செம்பழுப்பு , கைகளில் மாம்பழம், பூங்கொத்து,கரும்பு, எள் , மோதகம், கோடரி இருக்கும்.

 

 

8.உச்சிஷ்ட கணபதி

தன் மடி மீது சக்தியை, அமர வைத்திருப்பார். இதனை துவாதச அட்சர கணபதி, என்று சொல்வோரும் உண்டு. இந்த அமைப்பில் இருந்து மாறுபட்ட வடிவமைப்பை ஸ்ரீ தத்வநிதி என்ற நுால் கூறுகிறது. நீலோத்பவ மலர், மாதுளம்பழம், வீணை, நெற்கதிர், குண்டுமணிகளின்ால் ஆன ஜபமாலை, ஆகியவற்றை தாங்கிய கைகளை உடையவர். கருநீல நிறம் உடையவர் என்கிறது இது.

9.விக்னராஜ கணபதி

இவரை விக்ன கணபதி என்றும் சொல்வர்.வெள்ளை நிறத்தில் 10 கரங்களுடன் படைப்பது ஒருவகை நான்கு கைகளும், சிவந்த நிறம் உடையவராக இவரைப்படைப்பது இன்னொரு வகை.இந்த இரண்டு விதமான கோலங்களும்இவருக்கு உண்டு.

10.க்‌ஷிப்ப கணபதி

இவரை க்‌ஷிப்ர பிரசாத கணபதி என்றும் சொல்வர். இவருக்கு 4 கைகள் உண்டு.திருவாவடுதுறை ஆதினத்தால் வெளியிடப்பெற்ற கணபதி என்ற நுாலில் க்‌ஷிப்ர கணபதியும், க்‌ஷிப்ர பிரசாத கணபதியும் இருவேறு உருவங்களாக படைக்கப்பட்டுள்ளன.

11.ஹேரம்ப கணபதி

ஐந்து முகங்கள் கொண்டவர். வெள்ளை நிறத்தினர். அபய வாத ஹஸ்தங்களுடன் மற்ற எட்டுக் கைகளில் படைக்கலன்கள் ஏந்தி இருப்பார். ஆதி சங்கரராலும் போஜராஜனாலும் துதிக்கப்பட்டவர்.

 

 

12.லட்சுமி கணபதி

எட்டுக் கைகள் உடையவர்.இருபுறமும் தன் இருமனைவியர் சித்தி-புத்தி தேவியரை மடிமீது அமர்த்திய வண்ணம் இருப்பார். நான்கு கைகளை உடையவராகவும் இவரைப் படைப்பதுண்டு. தும்பிக்கையில் ரத்ன கலம் இருக்கும். தன்னை வழிபடுபவர்களுக்கு எல்லா செல்வங்களையும் தருபவர். திருவாவடுதுறை வெளியீடான கணபதி என்ற நுாலில் லட்சுமி கணபதி இடம் பெறவில்லை. ஸ்ரீ விக்னேஸ்வர ஸ்துதி மஞ்சரி என்ற நுாலில் அமைந்த வரைக்கோட்டு ஓவியம் வண்ணம் தீட்டப்பட்டு இங்குஇடம் பெற்றுள்ளது.இவர் நிறம் வெள்ளை.

13.மகா கணபதி

இவரை வல்லப கணபதி, சித்தி கணபதி, த்ரைலோக்கிய மோகன கணபதி என்றெல்லாம் சொல்வார்கள். பல தியான சுலோகங்கள் உண்டு. முக்கண்கள் உடையவர். மடி மீது வல்லபா தேவி இருப்பாள். பத்து கரங்கள் வலக்கரங்களில் சக்கரம், சூலம், கரும்பு வில், கதை, மாதுளம் பழம், தும்பிக்கையில் ரத்ன கலசம், இருக்கும் இடது கரங்களில் சங்கு, பாசம், நீலோத்பல (கரும் குவளை) மலர், நெற்கதிர், தந்தம் இருக்கும். செங்கதிர் போன்ற நிறம் உடையவர்.

14.விஜய கணபதி

பெருச்சாளி வாகனத்தின் மீது நான்கு கரங்களுடன் அமர்ந்திருப்பதால் பாசம், அங்குசம், மாம்பழம், தந்தம் இருக்கும். தும்பிக்கையில் ரத்ன கலசம் இருக்கும். நிறம் சிவப்பு.

15.நிருத்த கணபதி

இவரைக் கூத்தாடும் பிள்ளையர் என்பர். நான்கு கைகள், விரல்களில் மோதிரங்கள் ஜொலிக்கும். பாசம், அங்குசம், கோடரி, தந்தம் ஏந்தியிருப்பார். பொன்னிறத்தவர். கற்பக மர நிழலில் களிநடம் புரிபவர்.

16.ஊர்த்துவ கணபதி

தேவியோடு இருப்பார். பொன்னின் நிறத்தவர். பச்சை நிறத்தாலான தேவியை ஒரு கையால் அணைத்திருப்பார். மற்ற ஏழு கைகளில் நீல ஆம்பல் மலர், நெற்கதிர்,. தாமரை, கரும்பு, வில், மலரம்பு, தந்தம், கதைஇருக்கும். தும்பிக்கையில் ரத்ன கலசம் இருக்கும்.

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் (vinayagar virutham) என்பது இந்து தெய்வமான கணேஷின் பக்தி கவிதை. இது 10 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தின் போது தமிழ் கவிஞர் ஔவையார் இறப்பதற்கு சற்று முன்பு எழுதப்பட்டது. இது அவரது மிகப் பெரிய கவிதை என்று கருதப்படுகிறது. இந்து ஆன்மீக நம்பிக்கை மற்றும் நடைமுறை பற்றிய அகவலின் விளக்கத்தையும், தெய்வத்திற்குக் காரணமான மனித வாழ்வின் போதனைகளின் அம்சங்களையும் பயன்படுத்துகிறது.

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

 

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top