Close
நவம்பர் 21, 2024 10:53 மணி

ஆன்மீக அறிவியல் வாழ்க்கைக்கு என்ன சொல்லுது..?

ஆன்மீக அறிவியல் (கோப்பு படம்)

கடவுளை நம்பியவன் காட்டுமிராண்டி என்கிறார்கள், ஆனால் இல்லை என்று எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்பவன் என்ன வகை?

இந்தோனேஷியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் உள்ள ஒரு சிறு கடல் பகுதியை நீர் வாழ் மீன் இனங்கள் முதல் விலங்குகள், ஏன் பறவைகள் கூட கடப்பதில்லை.

அதனால் அதை உயிரியலில் எல்லை என்கிறார்கள். அதனால் அதற்கு அப்பாற்பட்ட பகுதியில் வாழும் விலங்குகள், உயிரினங்களுக்கு சில நூறு மீட்டர்களுக்கு அருகில் இருக்கும் உயிரினத்திற்கும் ஜெனிடிகலாக எந்த தொடர்பும் இல்லை என்கிறார்கள். அதற்கு இதுவரை அறிவியலில் ஏன் என்ற காரணம் புரியவில்லை?

பசிபிக் கடலின் தண்ணீரும், அட்லாண்டிக் கடலின் தண்ணீரும் ஒன்றாக கலப்பதில்லை. அதற்கு இதுவரை அறிவியலில் யூகங்களாக சொல்கிறார்களே தவிர, ஆதாரமில்லை. ஆதாரமில்லாத அறிவியல் காட்டுமிராண்டித்தனமா?

அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் என்று சொல்பவர்கள், அங்கே இருந்த மூத்த குடிகள் யார் கண்டது என்றும், சமீபத்தில், அரிசோனா மாநிலத்தின் கிராண்ட் கானியன் என்ற இடத்தில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆடம்பரமான குகைகளில் மக்கள் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் புத்தர் போன்று தியானத்தில் இருக்கும் சிலைகள் அங்கே இருக்கிறது. அது.எப்படி அங்கே வந்தது என்பதற்கு அமெரிக்க அறிவியலில் பதில் இல்லை. அதனால் அதை மூடி மறைக்கிறார்கள்.

உலகின் மூத்தகுடி தமிழ் குடி என்று சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் தமிழகத்தில் எந்த தொல்வியல் ஆராய்ச்சியும் 10000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கண்டுபிடிக்கவில்லை. குமரிக்கண்டம் என்பது நிரூபிக்கப்படவில்லை.

எங்கே இருக்கிறது என்றும் பகுத்தறிவாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி பல விஷயங்கள் விடை தெரியாத புதிராக உள்ளது. அதுபோன்று அறிவியலில் பதில் சொல்லாத விஷயங்கள் ஆயிரமாயிரம் உண்டு.

நீ மற்றவர்களுக்கு துன்பம் தந்தால், அவர்களை தவறாக நடத்தினால் அந்த வினைக்கு எதிர் வினை உண்டு என்பது நம்பிக்கை, அதை “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்” என்று ஐயன் திருவள்ளுவன் வார்த்தைக்கு அறிவியல் சான்று உண்டா என்றால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். ஆனால் அதை அறிவியல் ஆதாரம் இல்லை என்பதால் வேண்டாம் என்று மறுக்க முடியுமா?

அது அனுபவம், அதையே ‘இன்னா செய்தாரை அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்பது உளவியலில் (psychology) உலகின் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் அறுமருந்தாக பார்க்கப்படுகிறது.

சமஸ்கிருதம் செத்தவர்கள் மொழி என்றால் அது முட்டாள்தனம், அதை ஏன் அமெரிக்க, ஐரோப்பிய பள்ளிகளில் சொல்லித் தருகிறார்கள் என்ற காரணத்தை ஆராய்ந்து அதற்கு விடை தேடினால் பகுத்தறிவு.

இராமாயணமும், மஹாபாரதமும் கட்டுக்கதை என்றால், அது நடந்ததில்லை, எந்த ஆதாரமும் இல்லை என்று நிரூபிக்காமல் மறுப்பதும் முட்டாள்தனமே. ஆனால் தற்போது கடலில் மூழ்கியது துவாரகா இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு நகரமே உள்ளே மூழ்கி இருப்பது 1970-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் 50 ஆண்டுகளாக அதை ஏன் ஆராயவில்லை என்பதற்கான விடையையாவது பகுத்தறிவாளிகள் சொல்ல முடியுமா?

இன்று அந்த நகரத்தின் ஆயுள் 5000-8500 ஆண்டுகள் பழமையானது என்று கார்பன் படிவங்கள் நிரூபிக்கிறது. மஹாபாரத போர் 5120+ ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிரூபித்துள்ளார்கள்.

அது சரிதான் அல்லது சரியல்ல என்று எது 100% நிரூபிக்கப்படவில்லை என்றால் நம்பாதவர்களுக்கு உள்ள உரிமை நம்புகிறவர்களுக்கு ஏன் இல்லை. அது தவறாகவே இருந்தாலும் அந்த நம்பிக்கை நம் நல் ஒழுக்கத்தை உயர்த்துகிறது என்றால் அது மூட நம்பிக்கையாகவே இருந்தாலும், அதை அனுபவத்தில் கண்டவர்கள் சொன்ன போது ஏற்பதாக இல்லை நான் செய்து பார்க்கிறேன் என்று மற்றவர்களை காயப்படுத்துவதுதான் சரியா?

இந்து மதத்தின் நம்பிக்கைகள் அப்படிப்பட்ட அனுபவத்தை கொண்ட அறிவியலே. அதற்கான காரணத்தை ஆராய்ந்து அதை முன் நிறுத்துவது பகுத்தறிவின் நோக்கம். அது இல்லை என்று ஏற்பதற்கு எதிரான நிலைக்கு பெயர் அதுவும் அதே முட்டாள் தனமானது.

அதாவது அதை எந்த ஆதாரமுமின்றி நம்புவது நான் செய்யும் முட்டாள்தனம் என்றால், எந்த ஆதாரமும் இல்லாமல் அதை அதே கண்மூடித்தனமாக அது தவறு என்று எதிர்ப்பதும் முட்டாள்தனமே. புரியுதா, இதெல்லாம் புரிஞ்சிருந்தா ஏன் பிரச்சினை வருகிறது!?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top