Close
நவம்பர் 22, 2024 12:11 காலை

ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்..!

கந்தசஷ்டி விழாவையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புக் கட்டிக்கொண்டனர்.

அலங்காநல்லூர்:

பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயில் அழகர்மலை உச்சியில் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை இக்கோயிலில் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் இதில் முன்னதாக சுவாமிக்கு சண்முகா அர்ச்சனையும் யாகசாலை பூஜைகளும் மகா அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து அன்ன வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க தீவட்டி பரிகாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மீண்டும் மாலைவேளையில் சண்முகா அர்ச்சனை நடைபெற்றது. இந்த கந்தசஷ்டி விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சஷ்டி மண்டபத்தில் அமர்ந்து காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், இணை ஆணையாளர் செல்லத்துரை மற்றும் அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் ,வருகிற ஏழாம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. 8ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் பல்லாக்கு வாகனமும், ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறும். இத்துடன் 7 நாள் நடைபெற்ற கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top