Close
ஏப்ரல் 2, 2025 6:27 காலை

நெய்யாடுபாக்கம் மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் மற்றும் பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்யாடுபாக்கம் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமையான பிரசித்தி அருள்மிகு மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் மற்றும் பட்டாபிராமர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று பனிரெண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையில் இன்று கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

யாக சாலையிலிருந்து கலச புறப்பாடு நடைபெற்ற போது.

கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை, லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம் பூர்ணாஹூதி உள்ளிட்ட யாக கால பூஜைகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தில் பூஜிக்கப்பட்ட புனித கலச நீர் ஊற்றி தீபாராதனைகள் காண்பித்து கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தேறியது.

பின்னர் பக்தர்கள் மேல் புனித நீர் தெளித்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மூலவர் மருந்தீஸ்வருக்கு. சிறப்பு தீபாராதனை நடைபெற்ற போது.

இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத் துறை உத்திரமேரூர் சரக ஆய்வாளர் பிரித்திகா,அறங்காவலர் குழு தலைவர் லெனின் மற்றும் கிராம பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top