பாரதம் கொண்டாடும் மகா கும்பமேளா உலகின் மிகப்பெரிய ஆன்மீகத்திருவிழா என ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடி வருகிறது.
உலகின் மிக பெரிய ஆன்மீக திருவிழாவான மகாகும்பமேளா உத்திர பிரதேசத்தில் பிரக்யாராஜில் 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ந் தேதி மகா சிவராத்திரியுடன் நிறைவடைகிறது. ஆரம்பித்த முதல் நாளிலேயே ஒன்றரை கோடி பேர் கங்கையில் தீர்த்தமாடியுள்ளனர் எனும் போதே இதன் பிரம்மாண்டம் புரிய வரும்.
உலகம் முழுவதிலுமிருந்து 45 கோடி பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இதற்க்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை யோகி தலைமையிலான மாநில அரசு 6 ஆயிரத்து 382 கோடி ரூபாயில் செலவில் செய்துள்ளது. இதன் ஏற்பாடுகளை பார்த்தாலே மலைக்க வைக்கிறது.
சாதுக்கள் சன்னியாசிக்கள் மடாதிபதிகள் பக்தர்கள் தங்க திரிவேணி சங்கமத்தில் 4 ஆயிரம் எக்டேர் பரப்பில் பிரம்மாண்ட தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 20 லட்சம் பேர் தங்கும் அளவிற்கு தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்புக்காக 10 அடி நீளம் கொண்ட 68 லட்சம் மரக்கம்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடில்கள் கூரை அமைக்க 250 டன் எடை கொண்ட GI சீட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடில்கள் அமைக்கும் பணியில் 3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
ஆடம்பரமான படுக்கை அறை மார்பிள் தரை நவீன கழிவறை அழகிய வேலைப்பாடுடன் கூடிய மர பர்னீர்ச்சர்கள், டிடிஎச் மற்றும் வைபை வசதி, 5 ஸ்டார் ஹோட்டலுக்குரிய அதி நவீன வசதிகளுடன் கூடிய குடில்கள் மட்டும் 10 ஆயிரம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பயன்பாட்டுக்கு 1.45 லட்சம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களை நிறுத்த 99 இடங்களில் ஆயிரத்து 850 எக்டேர் பரப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிக்காக 13 ஆயிரம் ரயில்கள், 7 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் 10,000 முதல் 20,000 பக்தர்களை நிர்வகிப்பதற்கு சிறப்பு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கும்பமேளாவின் மூலம் ரூ.25,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் பூஜை பொருட்கள் மூலம் ரூ.5,000 கோடி, பால் பொருட்கள் மூலம் ரூ.4,000 கோடி, பூக்கள் மூலம் ரூ.800 கோடி வருவாய் கிடைக்கும். ஹோட்டல்கள் மூலம் ரூ.6,000 கோடி வருவாய் ஈட்டமுடியும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
கும்பத்தில் ஸ்டால்கள் அமைக்க ஒவ்வொரு ஏலதாரரிடமும் ரூ. 1-2 கோடி வரை பெறபட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் ரூ.25,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும், மாநிலத்தின் பொருளாதாரத்தில் ஒட்டு மொத்தமாக ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
பாதுகாப்புக்காக 45,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் புரளிகள் பரவாமல் தடுக்க சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் மின் விளக்கு வசதிகள் செய்ய 4.5 லட்சம் புதிய மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.