Close
ஏப்ரல் 2, 2025 9:35 மணி

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பக்தர்களுக்கு கோடையை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்..!

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்கதர்களுக்கு கோடை கால சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சக்தி பீடங்களில் ஒன்றானது காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம். இங்கு நாள்தோறும் வெளி மாநில மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்கள் நலன் கருதி திருக்கோயிலை வலம் வரும் வகையில் சுமார் 6 அடி அகலம் உள்ள கூலிங் பெயிண்ட் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நேரில் காக்கும் பந்தல்கள் அங்கங்கே அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருக்கோயில் பிரசாதங்களாக மோர் , தயிர் சாதம் உள்ளிட்டவைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இது கோடை வெப்பத்தை பக்தர்களுக்கு தணிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடாக செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். காஞ்சி சங்கர மடத்தின் கிளை அயோத்தியில் அமைந்துள்ளதால் அங்கு வரும் பக்தர்களுக்கு காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில் குங்குமம் சங்கரமட விபூதியும் பிரசாதமாக அளிக்கும் வகையில் சுமார் 60 ஆயிரம் பிரசாத பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சுந்தரேச ஐயர் தெரிவித்துள்ளார்.

மேலும் பக்தர்கள் வசதிக்கு ஏற்ப குளிர்ந்த குடிநீர் நிலையமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top