Close
டிசம்பர் 3, 2024 5:15 மணி

கோயில்களில் மணி நிறுவப்பட்டிருப்பதறகு என்ன காரணம்

கோயில் மணி

ஆலயங்களில் மணி அடிப்பதற்கு காரணம்

கோயில்களில் மணி  அமைத்திருப்பதற்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள லாம்.

கோயில்கள் மனிதனிடம் உள்ள தீய அலை களை அழித்து நல்ல சிந்தனையை மேம்படுத் தவே முக்கியமாக கட்டப்பட்டது.

பெரும்பாலான கோயில்களில் மணி இருக்கும்.  அதை கோயிலுக்கு போகிறவர்கள் எல்லோரும் அடிப்போம். அதிலும் சிறுவர்க ளுக்கு கோயில் மணியை அடிப்பதென்றால் அலாதி பிரியம் தான்.

கோயிலில் மணி எதற்கு தொங்கவிடப் பட்டுள்ளது?

கோயில் மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது. பூஜை நேரங்களில் தெய்வீக சூழ்நிலைக்குப் பொருந்தாத ஓசைகளை மூழ்கடித்து இறைவனிடம் மனிதனின் மனம் லயிக்க மணியானது உதவுகிறது.

கோயிலில் மணி இருப்பதற்கு அறிவியல் காரணங்களும் இருக்கிறது தெரியுமா? கோயில் மணிகள் பெரும்பாலும் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், வெள்ளி, ஈயம் போன்ற பல உலோகங்களால் சரியான கலவையில் உருவாக்கப்படுகிறது.

இவை மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வருகின்றன. மணியை அடித்தவுடன் வரும் சத்தமானது 10 லிருந்து 20 வினாடிகளுக்கு எதிரொலிக்கும். அந்த சில வினாடிகளில் மனித உடலில் இருக்கும் ஏழு குணப்படுத்தும் மையங்களுக்கும் இது சென்று மனதை ஒருநிலைப்படுத்துகிறது.

மேலும், மணிச்சத்தமானது மனிதனின் உள்கோட்டில் ஒரு வித பாசிட்விங் வைப்ரேஷன்களை உருவாக்கி எண்ண ஓட்டங்களை கட்டுபடுத்தி ஒரு நேர் கோட்டுக்கு கொண்டு வருகிறது.

பூஜை நேரங்களில் அமங்கலமான வார்த்தை களோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் மணி அடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top