புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டைமேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சா மிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலையில் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக் காப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், அந்தப் பகுதியிலுள்ள பக்தர் கள் வந்திருந்து வழிபட்டனர். ஏற்பாடுகளை பாலு அய்யர் மற்றும் கோயில்பணியாளர்கள்சிறப்புடன் கவனித்தனர்