Close
மே 23, 2025 9:28 மணி

புதுகை சாந்தநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

புதுக்கோட்டை

புதுகை சாந்தநாதர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் 38 -ஆம்  ஆண்டு  மஹா பிரதோஷ  வழிபாடு  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.                                                                                                                                        புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் 38 -ஆம் ஆண்டு மஹா பிரதோஷ  வழிபாடு       நடைபெற்றது.  காலையில் மங்கள இசையுடன்  கோபூஜை     கணபதி ஹோமம் ருத்ரஜபம் கடபூஜை  கலச ஆவாஹனம், பாராயணம், கன்யா பூஜை, லட்சுமிபூஜை,  மஹா பூர்ணாஹுதி பூஜைகள்  நடைபெற்றது   தொடர்ந்து.

 வேதநாயகி உடனுறை  சாந்தநாத சுவாமிக்கு          பாலபிஷேகம் பன்னிர்  தயிர்  இளநீர் சந்தனம், மஞ்சள் நீர் திருநீர் உள்ளிட்ட   சிறப்பு அபிஷேகங்கள்  சந்தனக்காப்பு    மலர் அலங்காரத்துடன்  தீபாரதனை  நடைபெற்றது.   மாலையில்,  நந்திகேஸ்வரர்க்கு        பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட  பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் கலசாபிஷேகம்  மற்றும் தீபாராதனை   நடந்தது.

நந்திகேஸ்வரர் வெள்ளிக் கவசமலர் அலங்காரத் தில்  பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.திரளான பக்தர்கள் வருகைதந்து   வழிபட்டனர். பக்தர்கள் முகக் கவசம் அணிந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

மஹா பிரதோஷ வழிபாடு விழா ஏற்பாடுகளை மல்லிகாவெங்கட்ராமன்,  திருக்கோவில் நிர்வாகிகள் அரிமளம்  ரவி சிவாச்சாரியார் வைத்தீஸ்வர சிவாச்சாரியார், புதுகை ரவிக்குருக்கள் கோயில் ஊழியர்கள் உட்பட பலர் கவனித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top