புதுக்கோட்டை திருவப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் . கோயில் மாசிபெருந்திருவிழாவின் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். வழக்கம் போல இந்த ஆண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா சென்ற 27.2.2022 கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மார்ச் 6 -ஆம் தேதி பொங்கல் விழாவும், 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) தேரோட்டமும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த பொங்கல் விழாவையொட்டி அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து வந்தும் கரும்பு குழந்தை தொட்டிலுடனும் , அக்கினிச்சட்டி, அலகு குத்தியும் தங்களது பொங்கல் வைத்தும், தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, நகரில் பல்வேறு பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் அமைத்து கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்கப்பட் டது.மேலும், கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட பந்தல்களில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளா னோர்கலந்துகொண்டனர். புதுக்கோட்டை நகர்மன்ற தலைவராகப் பதவியேற்ற திலகவதி செந்தில் குடும்பத்துடன் பால்குடம் எடுத்து வந்துவழிபட்டனர்.
இதில் சுற்று வட்டார பகுதி யை சேர்ந்த திரளான பக்தர் கள் அம்மனை வழிபட்டனர். திங்கள்கிழமை இக்கோயில் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டநிர்வாகம் (7.3.2022) உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.