Close
நவம்பர் 21, 2024 8:38 மணி

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் தேரோட்டம்

புதுக்கோட்டை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம் மன் கோயில் மாசி மாதத் திருவிழாவை யொட்டி திங்கள் கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அது போல் நிகழா ண்டில் பிப்.20 -ல் பூச்சொரிதல் விழா மற்றும் 27 –ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிப் பெருந்திருவிழா தொடங்கி. மார்ச்-15 -ம் தேதி வரை 16 நாள்கள் நடைபெறுகிறது.

விழாவின் தொடக்க நாளில், திருவப்பூர் குலாலர் தெருவின் திடலிலிருந்து நாட்டார்கள், ஊரார்கள் தங்கள் கிராம தெய்வ மான கவிநாடு களரி பெரிய அய்யனார் கோயிலுக்கு புரவி எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகம், வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து இரவு ஏழு மணி அளவில் திருக்கோகர்ணம் அருள்மிகு திருக்கோகர்ணேசர் உடனுறை பிரஹதாம்பாள் ஆலயத்தில் உற்சவ மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை கள் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக எடு்த்துச்சென்று திருவப்பூர் கோயிலை அடைந்த அம்மனுக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது.  இதைய டுத்து ஏறத்தாழ 9 மணியளவில் கொடியேற்றப்பட்டு மாசிப்பெருந்திருவிழா தொடங்கியது.

புதுக்கோட்டை
திருவப்பூர் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், எம்எல்ஏ, ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர்

விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் அன்னவாகனம், ரிஷபவாகனம், சிம்மவாகனம், குதிரை வாகனம், முத்துப் பல்லக்கு போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது. விழாவி்ன் முக்கிய நிகழ்வாக (மார்ச்-7 ) திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள், அலகு குத்திச்சென்று தங்கள் நேர்த்திக்கடனை நி்றைவேற்றி அம்மனை வழிபட்டனர்.

புதுக்கோட்டை
சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீற்றிருக்கும் அம்மன்

இதில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, மாவட்ட ஆட்சியர் கவிதாராமு,  மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன், வடக்கு மாவட்ட திமுக செயலர் கே.கே.செல்லப்பாண்டியன்.

நகர்மன்றத்தலைவர் திலகவதிசெந்தில்,  நகராட்சி ஆணையர் நாகராஜன்,  முன்னாள் தக்கார் ஆர். வைரவன், திருவப்பூர் முத்துமாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகி பி.விஆர். சேகரன், கவிஞர்தங்கம்மூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ்பாபு உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top