Close
நவம்பர் 22, 2024 3:52 காலை

புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்தரவிழா

புதுக்கோட்டை

சிறப்பு அலங்காரத்தில் புதுகை தண்டாயுதபாணி சுவாமி

புதுக்கோட்டைமேல ராஜ  வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில்  பங்குனி உத்தரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 புதுக்கோட்டைமேல ராஜ  வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில்  பங்குனி உத்தரத்தை முன்னிட்டு இதையொட்டி,   காலையில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.

தண்டாயுதபாணி சுவாமி  மலர் அலங்காரத்திலும், ஆலயத்திலுள்ள  விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத்திலும்  உற்சவர் மலர் அலங்காரத்திலும்அருள் பாலித்தார். இதில்,   அந்தப் பகுதியிலுள்ள பக்தர்கள் வந்திருந்து   வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பாலு அய்யர் மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்புடன் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top