Close
நவம்பர் 10, 2024 4:12 காலை

புதுக்கோட்டை வேட்டைப்பெருமாள் கோயில் குடமுழுக்கு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்திலுள்ள வேட்டைப்பெருமாள் கோயிலில் நடந்த குடமுழுக்கு

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு வேட்டை பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை விமரிசையாக  நடைபெற்றது.

மன்னர் குடும்பத்திற்கு சொந்தமானதும், மன்னர் வேட்டைக்கு செல்லும்போதும் மன்னருக்கு துணையாக அவர்முன் சென்றதும்,  புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பூர்வீக பெயராசிய நவசாலபுரியின் காவல் தெய்வமாகவும் விளங்கும் ஸ்ரீ வேட்டைப் பெருமாளின் ஆலயம் புனரமைக் கப்பட்டு  பங்குனி மாதம் 7-ஆம் தேதி (21.3.2022) திங்கட்கிழமை  காலை 9.20 மணிக்கு மேல் 10.20 மணியளவில்   ஸ்ரீ வேட்டைப் பெருமாள் மற்றும் விநாயகர் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது,

 இதையொட்டி அமைக்கப்பட்ட யாகசாலையில் வியாழக்கிழமை(17.3.2022) 10 மணிக்கு அனுக்ஞை விநாயகர் பூஜை. புண்யாகவாஜனம், கணபதி ஹோமம், தனபூஜை. நவக்கீரஹ ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.18.03.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஸ்து சாந்தி, மிருத்சங்கீரஹணம், அங்குரார்ப்பனம், ரக்ஷக்ஷாபந்தனம். கடஸ்தாபம், முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. இரவு 8.30 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனையும் இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம். பூர்ணாஹூதி, தீபாராதனையும்

19.03.2022 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் பூர்ணாஹூதி, தீபாராதனை,மூன்றாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் நான்காம் கால யாகசாலை பூஜை ஆரம்பம். ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம்கால யாகபூஜையும் நடைபெற்றது.

புதுக்கோட்டை
குடமுழுக்கு விழாக்குழுவினர்

21.3.2022 திங்கள்கிழமை விநாயகர் பூஜை, கோபூஜை, லட்சுமி பூஜையுடன் தீபாரதனை நடத்தி கடம் புறப்பாடும், தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 10.30 மணிக்கு மஹாதீபாராதனை நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர்திலகவதிசெந்தில்,  தொழிலதிபர், எஸ்விஎஸ். ஜெயகுமார், டாக்டர் ராமதாஸ் வி. ராமச்சந்திரன், குணசீலன் உள்ளிட்ட திருப்பணி குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top