Close
நவம்பர் 22, 2024 3:18 காலை

சிவகிரி பொன்காளியம்மன் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிவகிரி

சிவகிரி பொன்காளியம்மன்

சிவகிரி பொன்காளியம்மன் பொங்கல் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

சிவகிரி அருகே உள்ள தலையநல்லூரில் அமைந்துள்ளபொன் காளியம்மன் பொங்கல் விழாவானது ஆண்டு தோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான பொங்கல்தேர்த்திருவிழா மார்ச்  15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்று இரவு 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பூச்சாட்டு விழா நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

கடந்த  20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சிவகிரி வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து தலைநல்லூரில் உள்ள பொன்காளிஅம்மன் கோவிலுக்கு அம்மன் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதை தொடர்ந்து 21 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு கிராம சாந்தி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும்,மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊஞ்சலூர் காவிரி கரையில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

சிவகிரி
சிவகிரி பொன்காளியம்மன் பொங்கல்விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை நள்ளிரவு நடந்த குதிரை துள்ளலுடன் பந்தம் பிடித்தல் நிகழ்ச்சி

அதை தொடர்ந்து 23ஆம் தேதி புதன்கிழமை  நடந்த பொங்கல் விழாவில்  பக்தர்கள் காலை முதலில் பொங்கல் வைத்து அம்மனுக்கு மாவிளக்கு  வைத்து பூஜை செய்தனர். இதையடுத்து அன்று  நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடந்த குதிரை துள்ளல் நிகழ்ச்சியில்   பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலை சுற்றி  தீப்பந்தம் ஏந்திச்செல்ல  அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.  24 -ஆம் தேதி வியாழக்கிழமை  வண்ண கருப்பணசாமி பொங்கல் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து 26 -ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மற்றும் இரவு 9 மணிக்கு சிவகிரி வேலாயுத சாமி கோவிலுக்கு அம்மன் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top