தமிழ்நாடு கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்ட மாநாடு புதுக்கோட்டை சிவகாமி ஆச்சி நகரில் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் மாலையீடு பழனிவேலு பாலசுப்பிரமணியன் சுப்புராமன் ஆர் கே நாகராஜ் நகர தலைவர் ஞானமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாநிலத் தலைவர் பி வாசு பேசியதாவது திமுக அரசு பதவியேற்றவுடன் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூபாய் 1000 வழங்கியும் மாத ஊதியம் ரூபாய் 4000 ஆக உயர்த்தியும் ஒரு கால பூஜை திட்டத்திற்கு திருக்கோயில் பெயரில் ரூபாய் 2 லட்சம் வழங்கியும் பூசாரிகள் இறந்தால் இறப்பு தொகை 5,000 வழங்கியும் கிராம கோயில் திருப்பணிக்கு ரூபாய் 2 லட்சம் வழங்கியும் பல்வேறு சலுகைகள் அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் இதை உடனிருந்து செயல்படுத்த உதவிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு நன்றி தெரிவித்து மாவட்டந்தோறும் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி வருகிறோம் மேலும் பூசாரிகள் நல வாரியம் அமைக்கவும் கிராம கோயில்கள் தோறும் இலவச மின்சாரம் வழங்கவும் இந்த நன்றி அறிவிப்பு மாநாடு வலியுறுத்துகிறது என கிராமக்கோவில்கள் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் பி வாசு குறிப்பிட்டார் .
கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு

மாநாடு சங்க பூசாரிகள் கோவில் கிராமபூசாரிகந் கோவில் அைமகிராம