Close
நவம்பர் 22, 2024 8:16 காலை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்

மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மக்கள் வெள்ளத்தில் நடைபெற்ற தேரோட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  தேர் திருவிழாவில்  லட்சக்கணக்கான பக்தர்கள் சிவசிவ என பக்தி முழக்கத்துடன் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் .

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.வியாழக்கிழமை காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து  இரவு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .

சித்திரைத் திருவிழாவின் 11 -ஆம் நாளான வெள்ளிக்கிழமை திருவிழா தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தேர்களும் பல வண்ண பூக்களால் வண்ண வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன.

அதிகாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் கோவிலிலிருந்து பல்லாக்கில் தேரடி எழுந்தருளினார்கள். இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

பெரிய தேரில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை. சுவாமியும் சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். 5.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையாளர் ஆகியோர்  தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, கூடியிருந்த பக்தர்கள் ‘‘சிவா சிவா ஓம்’’ நமச்சிவாய என பக்தி முழக்கமிட்டபடி  தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர் .

இதனை இதைத் தொடர்ந்து 6 மணிக்கு சிறிய தேரை பக்தர்கள் இழுத்தனர். தேருக்கு முன் அலங்கரிக்கப்பட்ட யானை, ஒட்டகம் சென்றன இதைத்தொடர்ந்து விநாயகர், முருகன் ஆகிய சுவாமிகளும் சென்றன. அதையடுத்து பெரிய தேர், சிறிய தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் சப்பரம் ஆகியவை சென்றனர். பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்து ஆடி மாசி வீதிகளில் சென்றடைய பச்சை உடை, பச்சைத் துண்டு அணிந்து மில் தொழிலாளர்களும் , இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஏராளமான பக்தர்களும் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

மாசி வீதிகளில் வரும் போது ரோட்டின் இரண்டு பக்கங்க ளிலும், வீடுகளிலும், மாடிகளிலும் நின்றிருந்த ஏராளமான பக்தர்கள் ‘சிவ சிவாய நம’ பரவசத்துடன் கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். உயரமான இடங்களில் ஏராளமான பக்தர்கள் மீனாட்சியின் தேரின் மீது மலர் தூவி தரிசனம் செய்தனர். கீழ மாசி வீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் 4 மாசி வீதிகள் வழியாக சென்று, பெரிய தேர், சிறிய தேர் 1 மணி அளவிலும் தேரடி வந்தடைந்தது. தேர் திருவிழாவையொட்டி நான்கு மாசி வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போக்குவரத்து திருப்பி விடப்பட்டன. மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா தொடர்ந்து நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதற்காக இருந்து கள்ளழகர் நேற்று மதுரை புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக பல்வேறு மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்பு கொடுத்தனர்.

 மாலை எதிர்சேவை நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாளை அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சிதருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top