Close
நவம்பர் 22, 2024 1:13 மணி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காக யாகவேள்வி தொடக்கம்

மேல்மருவத்தூர்

உலக நன்மைக்காக மேல்மருவத்தூரில் நடைபெற்ற யாகத்தை தொடக்கி வைத்த தெலங்கானா ஆளுநர் தமிழிசைசௌந்தர்ராஜன்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காகபங்காரு அடிகளார் தலைமையில் 1008 யாக குண்ட வேள்வி பூஜைகவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தொடக்கி வைத்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காக 1008 வேள்வி யாக குண்டங்கள் அமைத்து ஆன்மீக குரு பங்காரு அடிகளார் தலைமையில் நடைபெற்ற வேள்வி பூஜை தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காக 1008 வேள்வி பூஜையை 6 ந் தேதி ஆன்மீக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீ தேவி ரமேஷ் குருபூஜை, விநாயக பூஜை, சக்தி பூஜை, உள்ளிட்ட பூஜைகள் செய்து வேள்வி பூஜைக்கான ஏற்பாடுகளை தொடங்கி வைத்தார். சித்தர் பீடம் வளாகம் முழுவதும் முக்கோணம் சதுரம், சாய்சதுரம், ஐங்கோணம், அறுகோணம், என் கோணம், வட்டம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், சூலம்,உள்ளிட்ட வடிவங்களில் 1008 வேள்வி குண்டங்கள் அமைக்கும் பணியில் 1000க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து 15 -ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் மங்கல இசையுடன் விழா துவங்கியது. காலை 4 மணியளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 9 மணி அளவில் சித்தர் பீடம் வருகை தந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். காலை 10 மணி அளவில் அன்னதான நிகழ்ச்சியை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் துவங்கி வைத்தார்.

மேலும் 16 -ஆம் தேதி சித்ரா பௌர்ணமியை தொடர்ந்து ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காலை 8:30 மணிக்கு சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு பாதபூஜை செய்து செவ்வாடை பக்தர்கள் வரவேற்பளித்தனர். மாலை 3 மணி அளவில் ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் சாலையில் வேள்வி சாலையில் கோ பூஜை செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி கருவரை முன்பாக நவதானியத்தால் அலங்கரிக்கப்பட்ட வட்டம், எண்கோணம். டைமண்ட் வடிவத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த பிரதான வேள்வி குண்டத்தில் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் தீபாராதனை காட்டினார். இதனைத் தொடர்ந்து சித்தர் பீடம் வந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்துகொண்டு வேள்வி பூஜையை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ்நோய் தொற்றிலிருந்து மக்கள் முழுமையாக மீண்டு சுபிட்சம் பெறுவதற்காக சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் ஐஸ்வரிய மேரு சக்கரம் அமைத்து மனித இனம் பஞ்சபூதங்களை போற்றி வணங்கி, முழு அமைதியை பெற்று வாழ்க்கை தெளிந்த நீரோடை போல அமையவும், தாய் தந்தையரை மதித்து வணங்கி அவர்களின் ஆசியுடனும் பாசத்துடனும் வாழவும், உலக நாடுகளில் வளமான மற்றும் அமைதியான சூழல் உருவாகவும், இந்திய நீர்நிலைகள் நிரம்பி எல்லா பகுதியிலும் செழிப்பான விவசாயம் பெருகவும், உலகப் பொருளாதாரம் மேம்படவும் அன்னை ஆதிபராசக்தியை வணங்கி வேள்வி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டிக்காராமன், ஓய்வுபெற்ற நீதிபதிகள் முருகேசன், ராஜேஷ்வரன், முன்னாள் தேர்வாணைய குழு தலைவர் அருள்மொழி, தென்னிந்திய ரயில்வே அதிகாரி செந்தில்குமார், ஓய்வு பெற்ற தென்னிந்திய ரயில்வே அதிகாரி ஜெயந்த் உள்ளிட்ட ஏராளமான செவ்வாடை பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை, ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆதிபராசக்தி இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் மேற்பார்வையில் தஞ்சை மாவட்ட தலைவர் வாசன், சக்தி பீட இணை செயலாளர் ராஜேந்திரன், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆதிபராசக்தி சக்தி பீட சக்திகள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top