Close
நவம்பர் 22, 2024 11:26 காலை

ஈஸ்டர் திருநாள்: வாடிகனில் போப்பாண்டவர் ஆசிவழங்கல்

ஈஸ்டர்

ஈஸ்டர்பண்டிகையையொட்டி வாடிகனில் ஆசி வழங்கிய போப்பாண்டவர்

ஈஸ்டர் திருநாளையொட்டி (17.4.2022) வாடிகனில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தேவலாயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.  இதில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இயேசு பிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேவால யங்களில் அதிகாலையில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அடுத்து கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகை, ஈஸ்டர். சிலுவையில் அறையப்பட்டு, கல்லறையில் அடைக்கப்பட்ட இயேசு பிரான், மூன்றாம் நாள் அதில் இருந்து உயிர்த்தெழுந்தார். இந்த நாளே ஈஸ்டர் திருநா ளாக கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துவர்கள் அனுசரித்த 40 நாள் தவக் காலத்தின் முக்கிய மான நாளாகவும் ஈஸ்டர் கருதப்படுகிறது. இந்த திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னையில் சாந்தோம், பெசன்ட் நகர், பாரீஸ் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சர்ச்சுகளில் நேற்று நள்ளிரவு இயேசுவின் உயிர்ப்பை நினைவு கூரும் வகையில், சிறப்பு திருப்பலி நடந்தது.

ஞாயிற்றுக்கிழமை  காலையும் சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக சனிக்கிழமை மாலை, சிலுவை பாதை ஆராதனையும் நடத்தப்பட்டது. ஈஸ்டரை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள், குடும்பத்தோடு திருப்பலியில் பங்கேற்றனர்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பம், மன்னிப்பு, தியாகம் மற்றும் அன்பின் பாதையைப் பின்பற்ற ஈஸ்டர் நம்மைத் தூண்டுகிறது. கிறிஸ்துவின் போதனைகள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ஊக்குவிக்கப்பட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் மற்றும் சமூக நீதி மற்றும இரக்கத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவு கூர்கிறோம். மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவத்தின் ஆவி நம் சமூகத்தில் மேலும் வளரட்டும் என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top