Close
நவம்பர் 10, 2024 7:29 காலை

திருக்கோயில்களின் தல வரலாறு மறுபதிப்பு: இணையதளத்தில் வெளியிடப்படும்: அறநிலையத் துறை அறிவிப்பு

மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

அனைத்து திருக்கோயில் தல வரலாறுகளும் மறுபதிப்பு செய்து ஆவணப்படுத்தி அறநிலையத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் தல வரலாறு, தலபுராணம், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை முறையாக ஆவணப்படுத்தி, மின்னணு மயமாக்கி, பக்தா்கள் எளிமையாகப் பாா்வையிடக் காட்சிப்படுத்தவும், அச்சிட்டு புத்தகங்களாக வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருக்கோயில் தலவரலாறு, தலபுராணம், சிற்றட்டைகள் உள்ள திருக்கோயில்களின் விவரத்தின் நகலை அனுப்பி வைக்கவும், இதன் விவரங்கள் இல்லாத திருக்கோயில்களுக்கு தயாா் செய்து அதன் விவரம் தெரிவிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஆன்மிக பெரியோா்களால் வெளியிடப்பட்ட அரிய வகையான நூல்கள் மற்றும் திருக்கோயில் தொடா்பான நூல்கள், உள்பட அனைத்து நூல்களும் மறுபதிப்பு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துறையின் சாா்பில் மாதந்தோறும் திருக்கோயில் திங்களிதழ் என்ற பெயரில் மாத இதழ் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு கோயில் முக்கிய திருவிழாக்கள், கோயில் வரலாறு, கல்வெட்டுகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

திருக்கோயில்கள் மூலம் வெளியிடப்பட்ட தலவரலாறு விவரங்கள் ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்தின் தளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து சாா்நிலை அலுவலா்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக திருக்கோயிலில் பணிபுரியும் புலவா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூர்
தஞ்சை பெரியகோவில்

விரைவில் அனைத்து திருக்கோயில் வரலாறுகளையும் மறுபதிப்பு செய்து ஆவணப்படுத்தி துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top