Close
மே 24, 2025 2:49 காலை

பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் திருவிழாவில் சிறப்பு பூஜை    

புதுக்கோட்டை

திருவிழாவையொட்டி பொற்பனைக்கோட்டை முனீஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு அலங்காரம் அபிஷேகம்

புதுக்கோட்டை அருகிலுள்ள  அருள்மிகு பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகிலுள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவை முன்னிட்டு காலையில் பொற்பனை முனீஸ்வரருக்கு   பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் தீபராதனை நடைபெற்றது.

பல்வேறு அபிஷேகம் நடைபெற்று மாலையில்  பொற்பனை முனீஸ்வரர் அகத்தியர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.   ஏராளமான பக்தர்கள்  வருகை தந்து   சாமி தரிசனம் செய்தனர். பின்னர்  அன்னதானம் நடைபெற்றது ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்புடன் கவனித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top