Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

புதுக்கோட்டை மகாராஜா சூட்டிங் ரேஞ்சில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே தொடங்கியது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி(கடந்த 2019 -ல் பரிசுக்கோப்பை வென்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி குடும்பம்) பைல் படம்

தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் மற்றும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ்  ஆகியவை இணைந்து 48வது மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மகாராஜா சூட்டிங் ரேஞ்சில் தொடங்கியது.

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 48 -வது துப்பாக்கி சுடுதல் போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் ஆக.31 -ந் தேதி    முதல் தொடங்கி போட்டி ஐந்து நாள்களுக்கு  நடைபெறுகிறது

போட்டியில் தமிழக முழுவதும் இருந்து 150 க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து 150 -க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர், பறந்து சென்ற தட்டுகளை துப்பாக்கி தோட்டாக்களால் சுட்டு வீழ்த்தினர். இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்ட்ரீட்  மற்றும் மிக்ஸடு ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

அமைச்சர்கள் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். போட்டி  முடிவில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சுழல் கோப்பை உள்ளிட்ட பல்வேறு கோப்பைகள் வழங்கப்பட உள்ளன
போட்டியை தொடங்கி வைக்க வந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் மெய்யநாதன் ஆகியோருக்கு துப்பாக்கி சுடுவது எப்படி என்பதை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி. ராஜா விளக்கிக் கூறி பயிற்சி அளித்தார்.  அதன் பின்னர் அமைச்சர்கள் இரண்டு பேரும் துப்பாக்கியால் சுட்டு போட்டிகளைத் தொடக்கி வைத்தனர்.
பிளாஷ் பேக்….
துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி இ ஓ-வான ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டி யன் குடும்பம் மூன்று தலைமுறைகளாக பங்கேற்று வருவது  குறிப்பிடத்தக்கது.
அவரின் மனைவி சரண்யா ராஜசேகர், மகள்கள் அந்த்ரா ராஜசேகர், உத்ரா ராஜசேகர், அவரின் உறவினரான  சம்யுக்தா , மற்றும் அவரின் தந்தை கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு  நிறைய  பதக்கங்களை வாங்கி இருக்கிறார்கள்.
மேலும் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியனும் இப்போட்டியில் கலந்துகொண்டு மெடல்கள் வாங்கி இருக்கிறார். இவர்களில் 11 வயதில் இருந்தே  அந்த்ரா ராஜசேகர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் வெற்றிபெற்று மாநில அளவில் மெடல்களை வாங்கி இருக்கிறார். மூன்று தலைமுறைகள் கடந்தும்  துப்பாக்கி சுடுதல் போட்டியில் இக்குடும்பம் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top