Close
ஏப்ரல் 3, 2025 10:03 மணி

ஈரோட்டில் நடைபெறும் சதுரங்க போட்டியில் புதுக்கோட்டைமாவட்ட  சதுரங்க கழக அணியினர் பங்கேற்பு

ஈரோடு

ஈரோட்டில் தொடங்கிய சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற புதுக்கோட்டை அணி வீரர்கள்

 ஈரோட்டில் நடைபெறும் சதுரங்க போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட  சதுரங்க கழக அணியினர் பங்கேற்றுள்ளனர்.
ஈரோட்டில் தமிழ்நாடு மாநில  2022   சாம்பியன்ஷிப்  -33 -வது சதுரங்கப் போட்டி  சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில்    நடைபெற்றது.
விழாவிற்கு ஈரோடு சதுரங்க கழக செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.     சூர்யா இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர்  மனோகரன் மற்றும் சூர்யா இன்ஜினியரிங் கல்லூரி  செயலாளர் மற்றும் தாளாளர் கலைச்செல்வன் ஆகியோர்   முன்னிலை வகித்தனர்.
ஈரோடு சதுரங்க கழக பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்  . சிறப்பு விருந்தினராக  ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் கலந்துகொண்டு சதுரங்கபோட்டியினை தொடங்கி வைத்தார்.
13 வயதுக்கு உட்பட்ட மற்றும் மகளிருக்கான  பிரிவில் புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகம்  சார்பில் அம்சவள்ளி, குருமூர்த்தி, கிருதுதேஷ்வரன், நபீரின்பானு, ஆரிஸ்இம்ரான், பிரபாகரன், சாய்செந்துரேஸ்வரன், ராஷ்மிகாஸ்ரீ, பாலசந்திரோதயன், ஹாசினிவந்தனா ஆகிய பத்து நபர்களும்  பல்வேறு மாவட்டத்திலிருந்து  450  -க்கும்மேற்பட்டோர் போட்டியில்   பங்கேற்றனர். தொடர்ந்து 5 நாட்கள் போட்டி நடைபெறுகிறது.
நிகழ்வில்  தமிழ்நாடு மாநில சதுரங்க கழக துணை செயலாளர் விஜயராகவன் , புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக துணைச் செயலாளர் புதுகை  செல்வம், செயற்குழு உறுப்பினர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அணி மேலாளர் வினிதா செல்வம் உள்ளிட்ட சதுரங்க ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top