Close
நவம்பர் 22, 2024 6:57 காலை

புதுக்கோட்டையில் நேருயுவகேந்திரா சார்பில் தேசிய விளையாட்டு தின விளையாட்டுப் போட்டிகள்

புதுக்கோட்டை

நேரு யுவகேந்திரா சார்பில் புதுக்கோட்டையில் நடந்த தேசிய விளையாட்டு தின போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – புதுக்கோட்டை ஆகிய துறைகளின் சார்பில் தேசிய விளையாட்டு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இந்தியாவின் மிகச் சிறந்த  ஹாக்கி விளையாட்டு வீரரான மேஜர் தியான் சந்த் பிறந்த நாளை (ஆக.29)  முன்னிட்டு தேசிய விளையாட்டு தினமாக கடந்த 2012ம் ஆண்டு முதல் கொண்டாடப்படு வருகிறது.

இந்தியாவின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையிலும், நமது அன்றாட வாழ்க்கையில் விளையாட்டு மற்றும் உடல் தகுதியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேரு யுவ கேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து, புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டரங்க வளாகத்தில் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடியது.

இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கூடைப்பந்து போட்டிகளும், தடகளப் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்  குமரன் தலைமையில், நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர்  ஜோயல் பிரபாகர் துவக்கி வைத்தார். போட்டிகளை கூடைப்பந்து பயிற்றுநர்  சண்முகப்பிரியன் மற்றும் நேரு யுவ கேந்திரா திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம் ஆகியோர் நடத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மேஜர் தியான் சந்த் குறித்த வாழ்க்கைக் குறிப்பு கையேடு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் வாசு, சின்னராஜா மற்றும் மணிமேகலை ஆகியோர்  செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top