Close
நவம்பர் 22, 2024 7:26 காலை

தமிழ்நாடு ஓபன் செஸ் போட்டி: இறுதிச்சுற்று தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெறும் மாநில செஸ் போட்டிகளில் இறுதிச்சுற்றை தொடக்கி வைத்த மாவட்ட சதுரங்கக் கழக தலைவர் எஸ்.ராமச்சந்திரன்

புதுக்கோட்டையில் நடக்கும் சதுரங்கப் போட்டியின்   இறுதி   சுற்றினை மாவட்ட சதுரங்கக் கழகத்தின்  தலைவர்  எஸ். ராமச்சந்திரன்   தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை  மூவார்  முருகன்  மண்டபத்தில்  நடைபெற்று வரும்   70  -ஆவது  தமிழ்நாடு  மாநில  ஓபன்  சதுரங்கப் போட்டியின்   இறுதி   சுற்றினை  புதுக்கோட்டை மாவட்ட சதுரங்கக்கழகத்தின்  தலைவர்  எஸ்.ராமசந்திரன்   தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில்  தமிழகத்தின்  அனைத்து  மாவட்டங்களிலி ருந்தும்  250 வீரர், வீராங்கனைகள்  பங்கு  கொண்டு விறு விறுப்பாக விளையாடினார்கள்.   ஏராளமான  பெற்றோர்கள் பங்கேற்று  தங்கள் குழந்தைகள்  ஆர்வமாக விளையாடு வதைக் கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட சதுரங்கக் கழகத்தின் நிர்வாகிகள்  செய்தனர்.

நேற்று நடந்த சதுரங்கப்போட்டியின்  ஏழாவது  சுற்றினை புதுக்கோட்டை வைரம்ஸ்  மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்   சுப்பிரமணியன் மற்றும் மதியம் நடந்த எட்டாவது சுற்றினை செந்தூரான்  கல்வி குழுமத்தின்  தாளாளர் ராம.வயிரவன்  தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட  சதுரங்க  கழக  செயலர் பேராசிரியர் கணேசன், சங்க  துணை தலைவர்  அடைக்கலவன், இந்திய மருத்துவ சங்க  கிளையின்  நிதி செயலாளர் டாக்டர்  எம். கோபாலகிருஷ்ணன், புதுகை செல்வம்  உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.

ஐந்தாவது சுற்று விளையாட்டுப் போட்டியினை புதுக்கோட்டை    ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் தங்கம்மூர்த்தி தொடங்கி வைத்தார். அதேபோல் மதியம் ஆறாவது சுற்றினை மூவார் முருகன் மண்டபத்தின் நிர்வாக தலைவர் எஸ்.டி. ராமநாதன் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் துணைச்செயலாளர் எஸ் அப்துல் நசீர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் முதன்மை  நடுவர் ஆனந்தபாபு, மாவட்ட சதுரங்க கழகத்தின் நிர்வாகிகள் பேராசிரியர் கணேசன், அடைக்கலவன், அங்கப்பன், டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உள்ளிட்டவர்கள்  பங்கு பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top