புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டியில் திருவள்ளூர் சுரேந்தர் முதல் பரிசும் தூத்துக்குடி சேர்ந்த மித்ரன் ஆனந்த் இரண்டாம் பரிசும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் பாலசுப்பிரமணியன் மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் 70வது மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டி ஐந்து நாட்கள் புதுக்கோட்டை நகரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
சதுரங்கப் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சென்னை, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் என தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 7 வயது முதல் 85 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண்கள் என 246 வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் முதல் பரிசு, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மித்ரன் ஆனந்த் இரண்டாம் பரிசும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் பாலசுப்பிரமணியன் மூன்றாம் பரிசு, கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஆகாஷ் நான்காம் பரிசையும் வென்றனர்.
இவர்களுக்கு ரொக்க பரிசும் கோப்பை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட சதுரங்கக்கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் வழங்கி வாழ்த்தினார். மேலும் பங்கு பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. முதல் நான்கு இடங்களை விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.