Close
நவம்பர் 22, 2024 3:58 காலை

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்

தமிழ்நாடு

52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த வீராங்கனை லோகப்பிரியா (22).

தங்கப்பதக்கம் வென்று விட்டேன்… தந்தையை தோற்றுவிட்டேன் தமிழக பளுதூக்கும் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நியூசிலாந்தின் ஆக்லாண்டில் நடந்து வருகிறது. இதில் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கச் சென்றுள்ளனர். தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறி  வழிஅனுப்பி வைத்தார். நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் டிசம்பர் 4 வரை நடக்கிறது. இந்த  11 பேரில் 10-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்ற இருவரில் மாஸ்டர் பிரிவில் 490 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். பயிற்சியாளரான பட்டுக்கோட்டை ஜிம் ரவி என்பவரிடம் பயிற்சி பெற்ற எம்பிஏ பட்டதாரியான லோகப்பிரியா (22) இவர் 52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த மகிழ்ச்சி 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை.லோகப்பிரியா வெற்றிக்கனியைப் பறிக்கும் வரை காத்திருந்த மாஸ்டர் அனைவரது பாராட்டையும் பெற்று தேசியக் கொடியோடு மெடல் வாங்கிய லோகப்பரியா கீழே இறங்கும் போது சொன்ன தகவல் அவரை அப்படியே அதிர்ந்து போக வைத்தது.

உன் தந்தை காமன்வெல்த் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக உன் சித்தப்பா தகவல் சொல்கிறார் என்றதும், வெற்றியின் மகிழ்ச்சியை கொண்டாட நினைத்த வீராங்கனை தந்தையை இழந்த துக்கத்தில் கதறி துடித்துக் கொண்டிருக்கிறார்.

தங்கம் ஜெயிக்க வேண்டும், சாதனை படைக்க வேண்டும்  என்று சொல்லிக் கொண்டிருந்த தந்தை, தான் தங்கம் வாங்கியதைப் பார்த்து கொண்டாட இல்லாமல் போய்விட்டாரே எனக் கண்ணீருடன் கதறியது அனைவரையும் கலங்க வைத்தது. இதையடுத்து வீராங்கனைக்கு   அனைவரும் ஆறுதல் கூறினர்.

தமிழ்நாடு
கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வமுத்து

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வமுத்து மகள் தான் லோகப்பரியா. இவருடன் 2 சகோதரிகள் உள்ளனர். தந்தை சில வருடங்களாக சொந்த ஊரில் தங்கிவிட, தன் மகள் சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு அவரது தாய் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கட்டணக்கழிவறையில் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

இத்தனை ஏழைக் குடும்பத்தில் பிறந்த லோகப்பிரியா, பயிற்சியாளர் ரவியின் தொடர் பயிற்சியால் பளு தூக்குவதில் பல பதக்கங்களைவென்ற வீராங்கனை லோகப்பிரியா இன்று காமன்வெல்த் போட்டியிலும் வென்று பெருமை சேர்த்திருக்கிறார். இந்த வெற்றியை ஊரே கொண்டாட வேண்டிய நேரத்தில் இவரது தந்தையின் உயிரிழப்பு வெற்றிக் கொண்டாட்டத்தை காணாமல் போக வைத்துவிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top