Close
நவம்பர் 22, 2024 5:48 காலை

பெருந்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்ந்து விளையாடும் கிரிக்கெட் போட்டி

ஈரோடு

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியை தொடக்கி வைத்த பெருந்துறை எம்எல்ஏ ஜெயகுமார்

பெருந்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான  அமர்ந்து விளையாடும்  கிரிக்கெட் போட்டி பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஃபீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், ஈரோடு மாவட்டம். டிசம்பர் 3 இயக்கம் ஆகியவை இணைந்து அமரும் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி பெருந்துறையில் இன்று துவங்கியது.

போட்டியை பெருந்துறை மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கு பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.5001‌ ஐ பெருந்துறை சட்டமன்ற உறுப்பின வழங்குகிறார். இரண்டாம் பரிசு ரூ 3001 சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் அவர்களும் இணைந்து வழங்குகின்றனர்.

முதல் பரிசுக்கான கேடயத்தை கிழக்கு ஒன்றியம் கழகச் செயலாளர் அருள் ஜோதி என்ற கே.செல்வராஜ் மற்றும் வடக்கு ஒன்றியம் கழகச் செயலாளர் வைகை தம்பி என்ற ரஞ்சித் ராஜ் அவர்களும் இணைந்து வழங்குகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஜெயப்பிரகாஷ். மாவட்ட துணை தலைவர் அருணாச்சலம், மாவட்ட செயலாளர் மணிகண்டன், குமரேசன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ்.

ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் உமா மகேஸ்வரன், மாவட்ட கழக பொருளாளர் கே பி எஸ் மணி, ஒன்றிய குழு உறுப்பினர் ரொட்டி பழனிசாமி, பட்டக்காரன் பாளையம் மணி, கணக்கம்பாளையம் சதிஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top