Close
செப்டம்பர் 20, 2024 3:52 காலை

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு முன்பதிவு செய்ய இன்று(29.1.2023) கடைசி நாள்

புதுக்கோட்டை

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு முன்பதிவு செய்து கொள்ள இன்று (ஜன.29)  கடைசி நாள் என
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவில் (15 வயது முதல் 35 வயது வரை) உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம்,  தடகளம்,  இறகுபந்து, கையுந்துபந்து,  கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடத்தப்படும்.

பள்ளி (12 வயது முதல் 19 வயது வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு (17 வயது முதல் 25 வயது வரை) மாவட்ட அளவில் கபாடி,  சிலம்பம், தடகளம்,  கூடைபந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து,  நீச்சல், கையுந்துப்பந்து மற்றும் மேசைப்பந்து,  கிரிக்கெட் போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ்,  பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் (வயது வரம்பில்லை) மற்றும் அரசு ஊழியர்கள் (வயது வரம்பில்லை) என ஐந்து பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படும்.

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக் கான விளையாட்டு போட்டிகளின் பதிவுகளை அதிகரிக்கும் பொருட்டு, விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் (29.01.2023- ஞாயிற்று கிழமை)  வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட் டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (www.sdat.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top