புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அலுவலர் மன்றத்தில் மாவட்ட அளவில் சிலம்பாட்ட போட்டிகள் புத்தாஸ் வீரக்கலை கழகத்தினால் நடத்தப்பட்டது
புத்தாஸ் வீரக்கலை கழகத்தின் தலைவர் முனைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.
எஸ்விஎஸ்- ஹீரோ மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்விஎஸ்.ஜெயக்குமார் மற்றும் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், ஆக்ஸ்போர்ட் கேட்டரிங் கல்லூரி தாளாளர் சுரேஷ், சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி மோகன்ராஜ், கவிராஜன் அறக்கட்டளையின் தலைவர் முருகபாரதி, வாகவாசல் பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா முத்தையா, வழக்கறிஞர் சங்க பொருளாளர் சுரேஷ்குமார், அரசு இசைப்பள்ளி நடன ஆசிரியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர்.
இப் போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர் சீனியர், ஆண் ,பெண் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அலுவலர் மன்றத்தில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,
பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதாசிவம் தலைமை வகித்தார். நேரு யுவ கேந்திரா உதவி திட்ட அலுவலர் நமச்சிவாயம், அலுவலர் மன்ற செயலாளர் அம்பிகாபதி, முனைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தாஸ் வீரக்கலை கழக சேது கார்த்தி வரவேற்றார்
கலைஞர் தமிழ் சங்கத்தின் செயலாளர் சந்திரசேகரன், சந்தப்பேட்டை நகராட்சி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நைனா முகமது,டீம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் சலீம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சு பணி அலுவலர் மன்ற தலைவர் அஸ்வின் குமார் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.
கௌரவ விருந்தினர்களாக அலுவலர் மன்ற நிர்வாகிகள் விஜயரகுநாதன், முத்துக்கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகளும் கேடயங்களையும் வழங்கினர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் பிப்ரவரி மாதம் 18 -ல் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், தஞ்சாவூர் பாரதி சிலம்ப பயிற்சி பள்ளி ஒட்டுமொத்த முதல் இடத்தையும், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை புத்தாஸ் சிலம்ப பயிற்சி பள்ளி இரண்டாம் இடத்தையும்,எஸ் கலப்பம் கணேசன் நினைவு சிலம்ப பயிற்சி பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்,
வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் பெற்றோர்கள் நூற்று கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழாவின் நிறைவாக பயிற்சியாளர் பார்த்திபன் நன்றி கூறினார் .