தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் மணியம்மை பல்கலை கழக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்த அகில இந்தியஅளவில் மாற்றுத்திறனா ளிகள் பங்கேற்கும் 11வது சினியர் அகில இந்தியசிட்டிங் பாரா வாலிபால் போட்டியினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க இந்திய பாராவாலிபால் சங்கம், தமிழ்நாடுபாராவாலிபால் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாராவாலிபர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைந்துஅகில இந்தியஅளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான 11 -ஆவது சினியர் அகில இந்திய சிட்டிங் பாராவாலிபால் போட்டி 05.02.2023 தேதி வரை மூன்று நாள்கள் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
இந்தபோட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா,தெலங்கானா,ஆந்திரா,உத்ராகாண்ட், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான், ஒரிசா, மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகளைச் சார்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தப் போட்டியிலிருந்துவீரர்கள் இந்தியஅணிக்குதேர்வு செய்யப்பட்டுஉலகஅளவில் நடைபெறும் பாராஒலிம்பிக் போட்டியில் கலந்துஉள்ளனர் என்றார் அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி .
பின்னர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் 60 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 4 கோடி மதிப்பிலான கடன் உதவிதொகைக்கான காசோலையினை வழங் கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கள்துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), தமிழ்நாடு பாரா வாலிபால் சங்க மாநில தலைவர் ஈரோடு மக்கள் ஜி. ராஜன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டலமேலாளர் சங்கீதா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சாவூர் மாவட்ட தடகளசங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலிபால் சங்க தலைவர் இராமநாதன் துளசிஅய்யாவாண்டையார்.
தஞ்சாவூர் மாநகராட்சிமேயர் சண் ராமநாதன், மாவட்டஊராட்சிதலைவஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுபல்கலைக்கழகம் துணைவேந்தர் டாக்டர். எம். சுந்தர்,பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆட்சிமன்றக்குழுஉறுப்பினர் அன்புராஜ், PCI நிறுவன செயலர் எம். மகாதேவ்,
இந்திய பாராலிம்பிக் வாலிபால் அசோசியேசன் தலைவர் சந்திரசேகர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ். வேலுச்சாமி, தமிழ்நாடு பாரா வாலிபால் அசோசியேசன் மாநில பொதுச் செயலாளர் ராஜா, பத்மஸ்ரீ கிரிஷ்சுக்பீர் சிங் , சந்திரசேகர், மாவட்ட விளையாட்டுஅலுவலர் டேவிட் டேனியல் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்