புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 மாவட்டங்களில் இருந்து 300 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆபிஸர்ஸ் கிளப் வளாகத்தில் புத்தாஷ் சிலம்பம் சாம்பியன்ஷிப் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு போட்டி நடைபெற்றது
இப்போட்டியினை டவுன் டிஎஸ்பி ராகவி துவக்கி வைத்தார் தொழிலதிபர் எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார், கவிஞர்தங்கம் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 300 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஐந்து வயது முதல் 26 வயது வரையிலான வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
ஒற்றை சிலம்பு, இரட்டை சிலம்பு, தொடுமுறை சிலம்பு உள்ளிட்டவைகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினார்கள்.
நடுவர்கள் இவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மதிப்பெண்களை குறிப்பெடுத்துக் கொண்டனர். மாநில அளவில் நடைபெறும் இந்த சிலம்பம் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளர் நிறுவனர் மாஸ்டர் கார்த்திகேயன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பதக்கம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது