Close
நவம்பர் 22, 2024 1:49 மணி

புதுக்கோட்டை புத்தாஸ் தேக்வாண்டோ பூம்சே ஒருநாள் பயிற்சி முகாம்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தாஸ் தேக்வாண்டோ பூம்சே ஒருநாள் பயிற்சி முகாமில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் பங்கேற்று வாழ்த்தினார்

புதுக்கோட்டை புத்தாஸ் தேக்வாண்டோ பூம்சே ஒருநாள் பயிற்சி முகாமில்  முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர்  கலந்து கொண்டார்
புதுக்கோட்டை திருவப்பூர்  சௌராஷ்ட்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற  புத்தாஸ் தேக்வாண்டோ பூம்சே ஒருநாள் பயிற்சி முகாமில்   கன்னியாகுமரி சேர்ந்த டேக்வண்டோ பயிற்சியாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.

குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் மற்றும் ரோட்டரி சங்க தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புத்தாஸ் வீரக்கலை கழகத்தின் நிறுவனர் சேது கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான  சி. விஜயபாஸ்கர்  கலந்து கொண்டு பேசினார்.

 விளையாட்டுக்கள் மட்டுமே மனப் புத்துணர்வை தரும் உடல் ஆரோக்கியத்தை தரும் எனவே மாணவர்கள் அனைவரும் தொலைக்காட்சி செல்போன் ஆகியவற்றிலிருந்து விடுபடுவ தற்கு மாற்று வழி விளையாட்டுக்கள் மட்டுமே விளையாட்டு களில் உங்கள் கவனத்தை செலுத்தினால் நன்கு படித்து நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று மாணவர்களை வாழ்த்தினார்.

நகர்மன்ற உறுப்பினர்சேட்டு மற்றும் க.பாஸ்கர்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் கண.மோகன்ராஜ், சௌராஷ்ட்ரா சபா தலைவர் அசோகன்,ரோட்டரி சங்க பொருளாளர் சங்கர் பொறியாளர் ஓம்ராஜ் மற்றும், 200 -க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள்  பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மூத்த பயிற்சியாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை புத்தாஸ் தேக்வாண்டோ பூம்சே ஒருநாள் பயிற்சி முகாமில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர்

இதையடுத்து நடைபெற்ற புத்தாஸ் டேக்வாண்டோ  பூம்சே ஒருநாள் பயிற்சி முகாம் நிறைவு விழாவுக்கு, நேரு யுவ கேந்திராவின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஜோயல் பிரபாகர் தலைமை வகித்தார்.

மாவட்ட குழந்தைகள் நல குழுமத் தலைவர் சதாசிவம் , நேரு யுவகேந்திரா உதவி திட்ட அலுவலர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் செந்தில்குமார்,டேக்வாண்டோ பூம்சே பயிற்சியாளர் ஜெயசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக பேசிய மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் சதாசிவம் பங்கே இன்று சமூகத்தின் பல்வேறு குற்றங்கள் குழந்தைகளை வைத்தே நடைபெறுகிறது.

காரணம் அவர்கள் பயன்படுத்தக்கூடிய செல்போன்களில் உள்ள சமூக வலைதளங்கள் மற்றும் நிகழ்வுகள் அவர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறது அவர்களை இதிலிருந்து கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்றால் விளையாட்டுகள் தான் ஒரே வழி.

விளையாட்டுகள்தான்  ஆரோக்கியத்தை தருகின்றன மன அழுத்தத்தை போக்குகிறது.  மாணவ மாணவிகளின் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்று பாரதியாரின் ஓடி விளையாடு பாப்பா பாடலை எடுத்துக்காட்டக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.  முன்னதாக பயிற்சியாளர் வனிதா வரவேற்றார். அழகம்மை நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top