Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

தேசிய பூப்பந்தாட்டப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக அணியினருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கல்

சென்னை

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியினரை பாராட்டி ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் கே பி சங்கர்

மகாராஷ்டிரா மாநிலம் முர்த்திசப்பூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான பூப்பந்து போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழக அணி வீரர், வீராங்கனைகளுக்கு திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி. சங்கர் வழங்கினார்.

67-ஆவது தேசிய ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டிகள மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டத்தில் உள்ள முர்த்திசப்பூர் என்ற இடத்தில் கடந்த மார்ச் 30 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் சார்பில் 28 அணிகள் பங்கேற்றன.

ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக வீரர்கள், வீராங்கனைகள் நான்கு போட்டிகளில் முதல் இடத்திலும், ஒரு போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் சில மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூரில் நடைபெற்றது. இதில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளைக் கொண்ட தமிழக அணி தேர்வு செய்யப்பட்டது. இந்த அணியைச் சேர்ந்த 20 வீரர், வீராங்கனைகள், 4 பயிற்சியாளர்கள் முர்த்திசப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் ஒட்டு மொத்த ஜம்பியன் பட்டத்தை வென்று தமிழக வீராங்கனைகள் சாதனை படைத்தனர் இவர்களுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது இதில் அனைத்து வீரர் வீராங்கனைகளை பாராட்டி ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நவீன கடிகாரங்கள் உள்ளிட்ட பரிசு பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி.சங்கர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

இதில் தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழக செயலாளர் வி. எழிலரசன், திருவள்ளூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழக தலைவர் எம் மதியழகன் மற்றும் குரு.சுப்பிரமணி, நந்தா, தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top