புதுக்கோட்டையில் சிலம்பு பயிற்சி முகாம் நிறைவு பெற்றதையடுத்து மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற கோடை கால சிலம்ப பயிற்சி முகாம் நிறைவு விழா நியூ மோடி போர்ட் பேட்மிண்ட்டன் கிளப்பில் நடைபெற்றது.
பயிற்சி முகாம் 10.5.2023 முதல் 21.5.2023 வரை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது 100 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சி முகாமில் சிலம்பம் பயிற்சி, குழந்தைகள் தற்காப்பு பயிற்சி,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
நிறைவு விழா நிகழ்ச்சி நியூ மோடி போர்ட் பேட்மிண்ட்டன் கிளப்பில், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், தலைமையில் நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜ், புத்தாஸ் வீரக்கலைக் கழகத்தலைவர் முனைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 100 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நற் சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர், சிலம்பத்திற்கு, மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளுக் கும் மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இதனால் பள்ளி கல்வித்துறையிலும் உயர்கல்வி துறையிலும் கலைத் திருவிழாக்கள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சீருடை பணியாளர் தேர்வு, மற்றும் அரசு பணி தேர்வுகளில் விளையாட்டு இட ஒதுக்கீடுகளுக்கு உரிய தனி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இன்றைய இளைய தலைமுறை மாணவச் செல்வங்கள் இதனை நன்கு மனதில் கொண்டு, தொலைக்காட்சி, செல்லிடப்பேசி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, இது போன்ற விளையாட்டு களை கற்று, உடல் ஆரோக்கியத்திலும் மன ஆரோக்கியத் திலும் அரசு தரும் பல்வேறு நலத்திட்டங்களையும் பெற்று பயனடைய வேண்டும் என்றார் வை. முத்துராஜா.
திலகவதியார் திருவருள் ஆதீன கர்த்தர் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், புதுக்கோட்டை மாவட்ட இறகு பந்து கழக செயலாளர் குமார்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் இப்ராஹிம் பாபு, நியூ மோடி பேட்மிட்டன் கிளப் நிர்வாகிகள், சேகர் ,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு முன்னதாக அறக்கட்டளையின் தலைவர் சேது. கார்த்திகேயன் வரவேற்றார். புத்தாஸ் வீரக்கலைக் கழகத்தின் பொருளாளர் பார்த்திபன் நன்றி கூறினார். இதில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.