Close
செப்டம்பர் 20, 2024 6:25 காலை

தலைமைப் பண்பால்… ஐந்தாம் முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை அணிக்கு தோல்வி என்பது புதிதல்ல பலமுறை பல தோல்விகளுக்குப் பிறகு வீறுகொண்டு எழுந்து, பிளே ஆப்களுக்கு தகுதி பெறும் அணியாக இருந்துள்ளது. தோல்விகளை மறந்து புது உத்வேகத்துடன் சென்னை அணி இந்த ஆண்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி, ஐபிஎல்லில் நிலையான அணி, தான் ஆடிய 14 -ல் 12 முறை பிளே- ஆப் களை அடைந்தது மற்றும் ஒன்பது முறை இறுதிப் போட்டியில் போட்டியிட்டது. பெரும்பாலும் அந்த அணி எம்எஸ். தோனியின் திறமையான தலைமை மற்றும் அவரது அணியில் இருந்து ஒவ்வொரு ஆட்டக்காரர்களின் செயல்திறனைப் பிரித்தெடுக்கும் அவரது திறனையும் நம்பியிருந்தனர்.

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஐபிஎல்லில் தோனியின் கடைசிப் போட்டியாக இருக்கக்கூடியது என்பதால், சூழ்நிலை உணர்ச்சிவசப்பட்டதாக இருந்தது. இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா தனது பதற்றத்தை பிடித்து வெற்றி ஓட்டங்களை அடித்து நொறுக்கினார், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் வாழும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமான கொண்டாட்டங்களைத் தூண்டியது.

தோனி இல்லாத சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும். மாலுமி இல்லாத படகு போல் தத்தளித்துப் பாறைகளில் மோதி சின்னாபின்னமாகி விடும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அப்படி ஒன்றும் ஆகாது, அவர் மைதானத்தில் ஆடுவதை நிறுத்தினாலும், பின் புலத்திலிருந்து அணியை வழி நடத்த தவற மாட்டார். சென்னை எப்பொழுதும் போல மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும்!

ஒரு சிறந்த பன்முக ஆட்டக்காரராக, ரவீந்திரா ஜடேஜா மாறியிருக்கிறார். முன்பெல்லாம் துடுப்பாட்டக்காரர்களை சுழல விடும் மந்திரவாதி என்று அறியப்பட்டவர், இப்பொழுது துடுப்பாட்டத்திலும் ஜொலிக்கிறார். பந்து பொறுக்குவதில் இவரை மிஞ்ச ஆளில்லை. சகல துறைகளிலும் சிறந்து இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு பெரும் பலமாக இருக்கும் இந்த பன்முகம் கொண்ட அனுபவஸ்தனை சி.எஸ்.கே அணி தன் தலைமைக்கு தெரிவு செய்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

நீங்கள் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்ய முயற்சிக்கிறீர்கள், மேலும் அவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள சிறந்த இடத்தை அவர்களுக்கு வழங்க முயற்சிக்கிறீர்கள்; அவர்கள் திறமையை வெளிக்காட்ட அதிக வாய்ப்புகள் உள்ள விதத்தில் நீங்கள் அவற்றைப் பயன்படுத்துகிறீர்கள்; அதே நேரத்தில், அவர்கள் வலுவாக இல்லாத பகுதிகளில் அவர்களை சீர்ப்படுத்தி, ஆடுகளத்தில் ஜொலிக்க செய்கிறீர்கள்.- இந்த வார்த்தைகள் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி அவர்களால் உதிர்க்கப்படடவை.

இனிவரும் அணித்தலைவர்கள் இதை பின்பற்றினால் போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் தொன்று தொட்டு சிறப்பான துவக்க ஆட்டக்காரர்களை கொண்டு பவர் ப்ளேவில் நல்ல ரன்களை குவித்து, பின்னர் வரும் வீரர்களுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் ஒரு அணியாக திகழும்.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top