Close
நவம்பர் 22, 2024 4:04 காலை

புதுக்கோட்டையில் மாநில பிளிட்ஸ் -ரேப்பிட் விரைவு செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை

புதுகையில் நடந்த மாநில செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கிறார், மாவட்ட சதுகங்கக்கழகத்தலைவர் எஸ். ராமச்சந்திரன்

புதுக்கோட்டையில்        26   -வது  தமிழ்  நாடு  மாநில  ரேப்பிட்- விரைவு சதுரங்கப்போட்டி  மற்றும் 25வது  பிளிட்ஸ் செஸ்  போட்டி    செந்தூரான்   கல்லூரியில்  நடை பெற்றது.

புதுக்கோட்டை  மாவட்ட    சதுரங்க    சங்க தலைவர் எஸ் . ராமசந்திரன்  தலைமையில்,  மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள் இப்போட்டியினை   நடத்தினர்.

மாநிலத்தின் பல்வேறு  பகுதியிலிருந்தும்  இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை  வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து  கொண்டு  விளையாடினர்.

போட்டியினை  சர்வதேச  செஸ்  நடுவர்  ஆனந்த பாபு, தலைமையில்  நடுவர்கள் நடத்தினர்.

வெற்றியாளர்கள்   ராபிட் விரைவு  செஸ் போட்டியில் பிளிட்ஸ் போட்டியில்  முதல் பரிசை சிவகங்கையை  சேர்ந்த  தினேஷ் ராஜனும்,  இரண்டாம் பரிசை  கோவையைச் சேர்ந்த ஜி. ஆகாஷும், மூன்றாமிடத்தை சிவகங்கை ரோஹித்தும், நான்காமிடத்தை செங்கல்பட்டை சேர்ந்த  விக்னேஷும் , ஐந்தாமிடத்தை  கன்னியாகுமரியை சேர்ந்த  பெமில்  செல்லத்துரையும்  வென்றனர்.

பிளிட்ஸ் போட்டியில்  முதல் பரிசை சிவகங்கையை  சேர்ந்த தினேஷ் ராஜனும்,  இரண்டாம் பரிசை  கோவையைசேர்ந்த ஜி. ஆகாஷும், மூன்றாம் பரிசை  சென்னையை சேர்ந்த கே.பி. ஆகாஷும்,  செங்கல்பட்டை சேர்ந்த  விக்னேஷ் நான்காமிடமும்,  விழுப்புரத்தை சேர்ந்த  கோகுல் ஐந்தாம் பரிசும் உட்பட    25  பேர் வென்றனர்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் ரொக்கப் பரிசு மற்றும் , வெற்றி கோப்பை, சான்றிதழ்களை புதுக்கோட்டை மாவட்ட செஸ் சங்க தலைவர்   எஸ்.ராமச்சந்திரன் வழங்கி வாழ்த்தினார்.

மாவட்ட   சதுரங்க கழக  செயலர்   பேராசிரியர் கணேசன்மற்றும்பொறுப்பாளர்கள்  .அடைக்கலவன் மற்றும் அங்கப்பன் , சர்வதேச  செஸ் நடுவர்கள்  தினகரன், ஆனந்தபாபு,  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top