Close
ஏப்ரல் 4, 2025 12:03 மணி

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர் களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

தஞ்சாவூர்

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சென்ற மாணவர்களை வழியனுப்பி வைத்த ஆட்சியர் தீபக் ஜேக்கப்

மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை
விளையாட்டுப் போட்டிகளின் வென்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற தஞ்சை மாவட்ட மாணவ, மாணவிகளை ஆட்சியர் தீபக் ஜேக்கப் வாழ்த்தினார்.

2022- 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்டஅளவில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கபடி, சிலம்பம், இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, மேசைப்பந்து ஆகியபோட்டிகள் இரு பாலருக்கும் 31.01.2023 முதல் 25.02.2023 வரை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுப் பிரிவினர்கள், மாற்றுத் திறனாளிகள்மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது.

மாவட்டஅளவிலான விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா 19.06.2023 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம், கரிகாற் சோழன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பரிசளிப்பு விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறப்பித்தார்கள்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் வீரர் வீராங்கனைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நேர்வில்,  மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் 30.06.2023 முதல் 25.07.2023 வரை நடைபெற வுள்ளது. இப்போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், வீரர், வீராங்கனைகள் மொத்தம் 694 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

முதலாவதாக 30.06.2023 முதல் 04.07.2023 வரைபள்ளி மாணவ, மாணவியர்கள் கபடி, வாலிபால் மற்றும் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கான சிலம்பம் விளை யாட்டுப் போட்டிகளிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் அன்னை சத்யா விளையாட்டரங் கிலிருந்து அரசு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்   அப்பேருந்தினைது வக்கி வைத்தார்.

மேலும், அவர்களுடன் போட்டிக்கு அழைத்துச் செல்லும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாவட்ட பயிற்றுநர்கள் தஞ்சை மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top