Close
செப்டம்பர் 20, 2024 3:52 காலை

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற புதுக்கோட்டை மாணவர்கள்..!

புதுக்கோட்டை

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்று   சாதனை புரிந்தனர்.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலானநீச்சல் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஈரோட்டில் நடைபெற்ற அக்வாசேலஞ்ச்-2023 என்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பல்வேறு மாவட்டங்களி லிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் தனுஷ் கிருஷ்ணன்,  பி.ஆர்  100 மீட்டர் பிரிவில் இரண்டாம் பரிசும், சந்தோஷிகா, பிஆர் 250 மீட்டர் பிரிவில் மூன்றாம் பரிசும், பிளை 50 மீட்டர் பிரிவில் இரண்டாம் பரிசும், தேவிகா கிரேடு 4 ல் இரண்டாம் இடமும் பிடித்து  மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பரிசுகழை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பள்ளிக்கு வந்தமாணவர்களைபள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top