Close
செப்டம்பர் 20, 2024 3:55 காலை

மாஸ்டர் செஸ் அகாடெமி சார்பில் சதுரங்கப் போட்டி

புதுக்கோட்டை

சதுரங்கப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்த எம்எல்ஏ- வை. முத்துராஜா

புதுக்கோட்டையில் மாஸ்டர் செஸ் அகாடெமி நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி  வென்ற மாணவ, மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா  வெற்றி கோப்பையும்  நற் சான்றும் வழங்கி வாழ்த்தினார்.

புதுக்கோட்டை டெல்லி பப்ளிக் பள்ளியில்  மாஸ்டர் செஸ் அகாடெமி நடத்திய  மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிக்கு டெல்லி பப்ளிக் பள்ளி பள்ளியின் தாளாளர் எம் என் நாகராஜன் தலைமை வகித்தார்.

மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.   மாஸ்டர் செஸ்  அகாடெமி  பார்த்திபன் அனைவரை யும் வரவேற்றார்.  போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.  15 வயது 8 வயது 10 வயது 12 வயது என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

மாலையில்  பள்ளியின்  வளாகத்தில் நடந்த பரிசளிப்பு  நிகழ்வில்,   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வெற்றி கோப்பையும்  நற் சான்றிதழ்களையும் வழங்கினார்.

விழாவில், காரைக்குடி  அப்போலோ ரீச் ஹாஸ்பிடல் கண்காணிப்பாளர்  டாக்டர் எல். கோகுலகிருஷ்ணன், பள்ளியின்   இயக்குனர் டாக்டர் பார்கவி,  மாஸ்டர் செஸ்  அகாடெமி  வே . பார்த்திபன்,  சேதுராமன் , சபியுல்லாமுகமது, முகமதுஇக்பால், புதுக்கோட்டை மாவட்ட  புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கணேசன், அடைக்கலவன் மற்றும்  அங்கப்பன் பயிற்சியாளர்கள்,   பெற்றோர்கள்  கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top