Close
நவம்பர் 21, 2024 8:10 மணி

கபடி.. கபடி.. கபடி..! புரோ கபடி சீசன் 10 சிறப்புச் செய்தி…

இந்தியா

நடுவில் யூ. மும்பா கோச் குளோம்ரெஷா மஷாண்டராணிய

நம் தமிழகத்தில் திருவிழாவாகக் கொண்டாடப்படும் விளையாட்டு கபடி.. வீரர்களை மட்டுமல்ல பார்வையாளர் களையும் உற்சாகம் தொற்றிக் கொள்ள வைக்கும் உணர்ச்சிப் பரவல் விளையாட்டு. ஒரு காலத்தில் கபடி அணிகள் இல்லாத கிராமங்களே இல்லை.

ஒவ்வொரு வட்டாரத்திலும் கபடி சூப்பர் ஸ்டார்கள் உற்சாகமாய் வலம் வருவார்கள். காலப்போக்கில் கிரிக்கெட்டின் ஆதிக்கத்திற்குப் பிறகு சற்ற மறையத் தொடங்கினாலும் புரோ கபடி என்ற இந்திய அளவிலான விளையாட்டுத் திருவிழாவின் வருகைக்குப் பின் மீண்டும் நம்மை எல்லாம் கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்கிறது கபடி.

அந்தக் கபடியின் ஒவ்வொரு ஆட்டம் குறித்தும் ஆட்டம் முடிந்த சில மணித் துளிகளிலேயே விமர்சனக் கட்டுரைகளாக நம் வாசகர்களுக்கு தர இருக்கிறது நம் தமிழ்மணி டாட் நியூஸ் இணைய தள செய்தி நிறுவனம்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நம் மண்ணில் முளைத்த கபடியின் புரோ கபடி லீக் சீசன் -10 அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ் ஸ்டேடியா மைதானத்தில் இன்று (டிச2-2023) தொடங்கியது.

12 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் – தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின. தொடர்ந்து 9 மணிக்கு நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் யு மும்பா – யுபி யோதாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.போட்டியின் தொடக்கத்தை நம் தேசிய கீதமான ஜனகனமன பாடலை உற்சாகமாய்ப் பாடி ஆரம்பித்து வைத்தார் பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம்தேவ்.

முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியும், தெலுகு டைட்டன்ஸ் அணியும் களம் கண்டன. குஜராத்தின் அணித்தலைவராக ஈரான் நாட்டைச் சேர்ந்த பஷல் அக்ரசலியும், தெலுகு டைட்டன்ஸ்க்கு பவான் ஷெராத்தும் பொறுப்பேற்றுள்ளனர். ஆட்டத்தின் முதல் புள்ளியை முதல் ரெய்டிலேயே கைப்பற்றினார்

பவான். இந்த சீசன் 10-ல் அதிக தொகையாக ரூ.2.65 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் இவர். ஆட்டத்தின் முதல் பாதிவரை தெலுகு டைட்டன்ஸ் அணிதான் 16-13 என்ற புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. ஆட்டத்தின் இடைவேளைக்குப் பிறகான முதல் ரெய்டிலேயே ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் குஜராத்தின் ஷோனு. இவர் சப்ஸ்டியூட் வீரர்தான். ஆனால் ஒரே ரெய்டில் 5 பாயிண்ட்களை அள்ளி வந்து இன்றைய நடத்திர ஆட்டக்காரராக ஜொலித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பவான் இன்று பவர் ஏதும் காட்டமால் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்தார்.

கடந்த முறையாவது காயம்பட்டிருந்தார். ஆனால் இந்தமுறைசுமார் 14 நிமிடங்கள் பவான் வெளியே அமர்த்தி வைக்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சஞ்சீவி கடைசி நேரத்தில் 3 புள்ளிகள் எடுத்தார். தெலுகு டைட்டன்ஸ் வீரர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை. சாதுர்யமான அணுகுமுறைகளும் இல்லை.

ஆட்டத்தின் பாதி நேரத்துக்குப்பின் குஜராத்தின் பக்கம் வெற்றிக் காற்று வீச ஆரம்பித்தது. ஆனால் கடைசி 5 ந்மிடங்களில் மீண்டும் ஒரு வாய்ப்பு தெலுகு அணிக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பயையும் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் ஆட்டத்தின் போக்கு குஜராத்துக்கு சாதகமாக அமைந்துவிட்டது.கபடி தனி ஆட்டமல்ல. அது அணி ஆட்டம் என்பதை முழுவதுமாக மறந்துவிட்டது தெலுகு டைட்டன்ஸ்.
குஜராத் அணித்தலைவர் பஷல் ஒவ்வொரு ரெய்டுக்கும் தனது அணி வீரர்களுக்கு டிப்ஸ்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய ஆட்டத்தின் உத்தி வெற்றிக்கு வித்திட்டது., இறுத்யில் 38-32 என்ற புள்ளிகளுடன் முதல் ஆட்டத்தின் முதல் வெற்றியை ருசித்தது குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணி.
இந்தியா
யூ- மும்பா அணி கேப்டன் கெல்

அடுத்து முதல் நாளின் இரண்டாவது ஆட்டத்தில் யு.பி.யோத்தாஸ் மற்றும் யூ. மும்பா அணிகள் களம் கண்டன. சிங்குகளை அதிகம் கொண்ட யூ.மும்பா அணி ஆரம்பித்திலிருந்தே தனது வெற்றிப்புள்ளியை தொடங்கி முன்னேறிச் சென்றது. ஸ்டார் ஆட்டக்காரர்களில் ஒருவரான ப்ரதீப் நர்வாலாய் கேப்டனாகக் கொண்ட யு.பி. யோத்தாஸ் அணி ஆரம்பத்தில் மந்தநிலையில் காணப்பட்டாலும் அடுத்தடுத்து முன்னேறி கடும் போட்டியை கொடுத்தது. நீயா ? நானா ? என்ற நிலையில் இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டன.

ஆனால் அனுபவசாலிகள் என்று பெரிதாயச் சொல்ல முடியாத யூ.மும்பாவின் அதிரடி ஆட்டங்கள் யு.பி. அணியை மிரட்டியது. மும்பாவின் மூர்க்கத்தனமாக ஆட்டத்தின் முன் யு.பி. அணி எடுபடவில்லை. இறுதியில் 34-31 என்ற புள்ளிகளுடன் யூ.மும்பா தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியா
குஜராத் அணித் தலைவர் பஷல் அக்ரசலி 

இன்றைய இரண்டு ஆட்டங்களிலும் பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட பவானும், பிரதீப் நார்வாலும் எடுபடாமல் போனது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமளித்தது.இன்றைய முதல் நாள் ஆட்டங்களில் வெற்றி பெற்ற குஜராத் அணித்தலைவர் பஷல் அக்சரலியும், யூ,மும்பா அணி பயிற்சியாளர் குளோம்ரெஷா மஷாண்டராணியும் ஈரான் தேசத்தவர்கள் என்பவர்கள் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. மொத்தம் 12 நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த சீசனின் மொத்த பரிசுத் தொகை ரூ. 8 கோடி ஆகும். இதில் பட்டம் வெல்லும் அணி ரூ.3 கோடியை தட்டிச் செல்லும். 2-வது இடத்தை பெறும் அணி ரூ.1.8 கோடியை பெறும்.

சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (டிசம்பர் 3-ம் தேதி) டெல்லி தபாங்குடன் மோதுகிறது. அதேவேளையில் சொந்த மண்ணில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் டிசம்பர் 22-ல் பாட்னா பைரேட்ஸுடன் விளையாடுகிறது. இந்த ஆட்டம் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது…! இறுதியில் வெற்றிக் கோப்பையை தட்டிச் செல்லப்போவது யார் என்பதை கடைசி வரை காத்திருந்து காண்போம்.
கபடி…கபடி….கபடி….!

#ஆக்கம்-பழ.அசோக்குமார்#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top